Home /News /national /

கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு - பிரதமர் மோடி பெருமிதம்

கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு - பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற வீடுகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகபிரதமர் மோடி கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Goa, India
    கோவாவில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 10 கோடி வீடுகள் குடிநீர் இணைப்பை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கோவாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், குடிநீர் சேவையில் கோவா புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாகவும், மாநில மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். நாடு முழுவதும் தற்போது கிராமப்புறங்களில் உள்ள 10 கோடி வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக குறிப்பிட்ட அவர், இது அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் தெரிவித்தார்.

    Also Read : அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசிய சம்பவம்.. டாக்டர் சரவணனை கைது செய்ய பாஜக புகார் மனு

    நாட்டைப் பற்றி கவலைப்படாதவர்கள், நாட்டின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும், அதுபோன்ற நபர்கள் தண்ணீருக்காக வாக்குறுதிகளை அளித்தாலும், தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட மாட்டார்கள் எனவும் பிரமதர் மோடி விமர்சித்தார். கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற வீடுகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில், வெறும் 3 கோடி கிராமப்புற வீடுகளுக்கே நேரடி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: BJP, Goa, Prime Minister Narendra Modi

    அடுத்த செய்தி