டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

News18 Tamil
Updated: August 19, 2019, 10:11 PM IST
டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
News18 Tamil
Updated: August 19, 2019, 10:11 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக அரை மணி நேரம் உரையாடியுள்ளார்.

பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டரில் வெளியிட்ட தகவலில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையில்லா உலகை உருவாக்குதன் அவசியத்தை டிரம்பிடம் பிரதமர் மோடி, வலியுறுத்தியதாகவும், எல்லை கடந்த பயங்கரவாதம் அற்ற நிலை ஏற்படவேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமை, கல்லாமை மற்றும் பிணிகளுக்கு எதிராக போராடும் எந்த நாட்டுடனும் இந்தியா ஒத்துழைக்கத் தயார் என அப்போது கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் சிலர் பேசுவதால் அமைதி சீர்குலைவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தான் சுதந்திரமடைந்து திங்களன்று நூறாண்டுகள் ஆகியிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அந்நாடு உண்மையான சுதந்திரத்தை அடைய இந்தியா முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...