ஜி-20 நாடுகளின் பொருளாதாரம் வலுவாக உள்ளது: கட்டமைப்பு வலுவாக இல்லை - மோடி வேதனை

ஜி-20 நாடுகளின் பொருளாதாரம் வலுவாக உள்ளது: கட்டமைப்பு வலுவாக இல்லை - மோடி வேதனை
பிரதமர் நரேந்திர மோடி
  • Share this:
நம்முடைய பொருளாதாரம் வலுவாக இருக்கலாம். நம்முடைய கட்டமைப்பு வலுவானதாக இல்லை என்று ஜி-20 நாடுகள் கூட்டத்தில் பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். 

உலக அளவில் கொரோனா தொற்று மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், ஜி-20 நாடுகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், ‘கொரோனா பிரச்னையால் ஆயிரக்கணக்கான மதிப்புமிக்க உயிர்களை நாம் இழந்துவிட்டோம். அதேநேரத்தில் இது சமூக மற்றும் பொருளாதார இழப்பு என்று நமக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும் உடனடி அதிர்ச்சிக்கு அப்பால், இந்த தொற்று எங்கே வெளிப்பட்டது என்ற அடிப்படை உண்மையின் மீது நாம் கவனம் செலுத்தவிரும்புகிறேன். 2008-ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகளை குறைத்ததில் முக்கிய அமைப்பாக ஜி20 இருந்தது. இந்த ஜி-20 நாடுகள் பொருளாதார நிலைத்தன்மையையும், வளர்ச்சியும் முன்னெடுத்தது. எப்படியிருந்தாலும், இந்த நடைமுறையில் உலகமயமாக்கலை அளவிட முழுமையாக நாம் பொருளாதாரக் கொள்கையைத்தான் அனுமதிக்கிறோம்.

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், பலதரப்பட்ட நாடுகளின் பங்களிப்பு குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. தற்போது, நமக்கு மற்றொரு உதாரணமும் உள்ளது. கொரோனா போன்ற பிரச்னைகள், நம்முடைய முக்கியமான வளங்களைத் திருடிச் சென்றுவிடும். நம்முடைய உயிர்கள்.. நம்முடைய ஆரோக்கியங்களையும்..


உலக அளவிலான உள்நாட்டு உற்பத்தியில் ஜி-20 நாடுகளில் பங்களிப்பு 80 சதவீதமாகும். மேலும், 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில் உலக அளவிலான கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் நாம் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளோம். அதனால், 88 சதவீத உயிரிழப்பைச் சந்தித்துள்ளோம். நம்முடைய பொருளாதாரம் வலுவாக இருக்கலாம். ஆனால், நம்முடைய கட்டமைப்பு உடையக்கூடியதாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்