மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்...! ராஜஸ்தான் ஆளுநரின் பேச்சால் சர்ச்சை

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நாம் எல்லோரும் விரும்புகிறோம். நாம் எல்லோரும் பா.ஜ.க தொண்டர்கள்.

news18
Updated: March 25, 2019, 5:51 PM IST
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்...! ராஜஸ்தான் ஆளுநரின் பேச்சால் சர்ச்சை
மோடியுடன் கல்யான் சிங்
news18
Updated: March 25, 2019, 5:51 PM IST
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். நாம் எல்லோரும் பா.ஜ.க தொண்டர்கள் என்ற ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யான் சிங்கின் சர்ச்சைப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கல்யான் சிங் தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்து வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பேசிய அவர், ‘மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நாம் எல்லோரும் விரும்புகிறோம். நாம் எல்லோரும் பா.ஜ.க தொண்டர்கள். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது இந்த நாடு மற்றும் சமுதாயத்துக்கு முக்கியமான ஒன்று’ என்று தெரிவித்தார்.

அரசியல்சாசனத்தின் அடிப்படையில் ஆளுநராக இருக்கும் ஒருவர் எந்த அரசியல் கட்சிக்கு சார்பாக செயல்படக் கூடாது. ஆனால், அதனை ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவருடைய பேச்சுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

87 வயதாகியுள்ள கல்யான் சிங், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில்தான் 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

அந்தச் சம்பவத்தின் காரணமாக அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டது. 1999-ம் ஆண்டு பா.ஜ.கவிலிருந்து விலகிய கல்யாண் சிங், 2004-ம் ஆண்டு பா.ஜ.கவில் மீண்டும் இணைந்தார். மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்தபிறகு, 2014-ம் ஆண்டு கல்யான் சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Also see:
Loading...
First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...