’நாங்கள் என்ன வேலைக்காரர்களா?’ மோடியைக் கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி

‘ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தது விளம்பரத்துக்கான ஒரு நாடகம். இங்கே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பவரை நான் எதற்காக பார்க்கவேண்டும். எவ்வளவு தைரியம் இருந்தால் முதலமைச்சர் இல்லாமல் தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுப்பீர்கள்?

’நாங்கள் என்ன வேலைக்காரர்களா?’ மோடியைக் கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி, மோடி
  • News18
  • Last Updated: May 6, 2019, 4:33 PM IST
  • Share this:
புயல் பாதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மறுக்கிறார் என்று பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, நாங்கள் ஒன்றும் உங்கள் வேலைக்காரர்கள் அல்ல என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் தம்லுக் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து அறிந்துகொள்வதற்காக மம்தா பானர்ஜியைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். ஆனால், அவருடைய பிடிவாதத்தின் காரணமாக அவர் என்னிடம் பேசவில்லை. அவர் எனக்கு, அழைப்புவிடுப்பார் என்று நான் எதிர்பார்த்தேன்.

ஆனால், அவர் போன் செய்யவில்லை. மீண்டும், நான் போன் செய்தேன். அப்போதும் அவர் பேசவில்லை. மேற்குவங்கத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி வேகத்தடையாக இருக்கிறார். புயல் பாதிப்பு குறித்து அறிந்துகொள்வதற்காக ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தேன். ஆனால், அதில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். அதிலிருந்து மேற்கு வங்கத்தின் வளர்ச்சியில் மம்தா பானர்ஜிக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்று தெரிகிறது. அவருடைய இந்த சுபாவம், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தார்.


மோடியின் விமர்சனத்துக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, ‘ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தது விளம்பரத்துக்கான ஒரு நாடகம். இங்கே தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பவரை நான் எதற்காக பார்க்கவேண்டும். எவ்வளவு தைரியம் இருந்தால் முதலமைச்சர் இல்லாமல் தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகளை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுப்பீர்கள்? மேற்கு வங்கத்தில் இந்த நாடகத்தை நடத்தாதீர்கள்.

காலாவதியான பிரதமரே (Expiry PM), உங்களுக்கு பிரதமராக இருப்பதற்கு தைரியம் கிடையாது. உங்களுடைய கழிவிரக்கம் எங்களுக்கு தேவையில்லை. காலைகுண்டா பகுதியில் மோடி தரையிறங்கிய பிறகே, ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்படுகிறது. நாங்கள், என்ன வேலைக்காரர்களா?’ என்று கடுமையாக சாடினார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: May 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading