5 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!

5 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: August 27, 2019, 8:29 AM IST
  • Share this:
கடந்த 22-ம் தேதி முதல் பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்பினார். 

பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளில் 5 நாட்கள் சுற்ருப்பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. பிரான்சில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிலும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இதையடுத்து, 5 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த பிரதமரை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக அமைந்தது என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இருநாட்டு உறவுகள் குறித்து பயனுள்ள வகையில் உரையாடியதாகவும், பயனுள்ள வர்த்தக விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் கூறியுள்ளார்.


மேலும் உலக அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக உறவை மேம்படுத்த இணைந்து செயல்படுவோம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் பார்க்க... அமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ..!
First published: August 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...