கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் - மான்கி பாத்தில் மோடி வேண்டுகோள்

பிரதமர் நநேந்திர மோடி

கொரோனா தடுப்பூசி தொடர்பான எந்தவொரு தவறான வதந்திகளையும் நம்பி, மக்கள் ஏமாற வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

 • Share this:
  ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 76வது முறையாக வானொலியில் உரையாற்றினார். அப்போது கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக கடந்து வந்ததால், நாட்டின் மன உறுதி அதிகமாக இருந்தது என்றார்.  ஆனால், கொரோனா இரண்டாவது அலை எனும் புயல் நாட்டையே உலுக்கிவிட்டதாக குறிப்பிட்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு மருத்துவர்கள் அனுபவம் பெற்று உள்ளதாகவும், ஆன்லைன் மூலம் அவர்கள் மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருவது பாராட்டத்தக்கது எனவும் மோடி கூறினார். பெருந்தொற்று சமயத்தில் முக்கிய பங்காற்றி வருவதாக, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

  மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருவதாகவும், பெரும்பான்மையானவர்களுக்கு தடுப்பூசி கிடைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் எனவும், தகுதியான நபர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  கொரோனாவை வெல்ல நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானப்பூர்வ ஆலோசனைகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு முழு சக்தியுடன் உதவ மத்திய அரசு செயல்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: