பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது!

இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி தொழில் தொடங்க வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

Karthick S | news18
Updated: August 24, 2019, 10:39 PM IST
பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு நாட்டின் மிக உயரிய விருது!
மோடி
Karthick S | news18
Updated: August 24, 2019, 10:39 PM IST
ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சையத் விருது வழங்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசர் முகமது பின் சயத் அல்நயன் விருதினை நரேந்திர மோடிக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாக அந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக அங்குள்ள இந்திய தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி தொழில் தொடங்க வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவும் சவுதி அரேபியாவும் இருதரப்பு வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள ஏரளமான வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்ட மோடி, ஏற்றுமதி, இறக்குமதி என்பதைத் தாண்டி உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  அங்கே, வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்களுடன் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


Also see:
First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...