• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய மோடி!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய மோடி!

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

உலகத்தின் பழமையான மொழி தமிழ் என்பதை நாம் கர்வதோடு கூற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்..

  • Share this:
    வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

    அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். அந்தவகையில் 16-வது வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு இன்று நடந்தது.

    இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். “எங்கள் துடிப்பான புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்” என்று வெள்ளிக்கிழமை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் மோடி.

    இந்நிலையில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி,

    “கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். அதாவது, உலகத்தின் பழைமையான மொழி தமிழ் என்பதை நாம் கர்வதோடு கூற வேண்டும், என்றார்.

    2003 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ஆம் தேதி இந்த பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் இந்தியர்களை கெளரவிப்பதற்காக இந்த நிகழ்வு உருவாக்கப்பட்டது. 1915-ம் ஆண்டு இதே நாளில் தான், மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக பணியாற்றத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: