நீரின்றி அமையாது உலகு! சுதந்திர தின உரையில் குறள் சொல்லி விளக்கம் அளித்த மோடி

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு புதிய சிறகுகள் கிடைக்க இந்த பொறுப்பை 130 கோடி மக்களும் ஏற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

நீரின்றி அமையாது உலகு! சுதந்திர தின உரையில் குறள் சொல்லி விளக்கம் அளித்த மோடி
மோடி
  • News18
  • Last Updated: August 15, 2019, 10:27 PM IST
  • Share this:
சுதந்திர தின உரையில் நீரின்றி அமையாது உலகு என்ற குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து பேசினார். 

73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 6-வது முறையாக தேசியக் கொடியேற்றினார். தேசியக் கொடியை ஏற்றிய பிறகு பேசிய மோடி, ‘மக்கள் சேவை செய்வதற்கு அளித்த வாய்ப்பை தவறவிட மாட்டோம் எனக் கூறினார். இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகளின் தலைக்கு மேல் கத்தியாக முத்தலாக் தொங்கிக் கொண்டிருந்தது என குறிப்பிட்ட பிரதமர், முத்தலாக் முறை நீக்கத்தால் இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகள் சுதந்திரமாக வாழ முடிகிறது எனக் கூறினார்.

சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவை நீக்கப்பட்டதன் மூலம் 70 ஆண்டுகளாக நடைபெறாத மாற்றம் புதிய அரசு அமைந்த 70 நாட்களுக்குள் ஏற்பட்டதாக பெருமிதம் அடைந்த பிரதமர், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு புதிய சிறகுகள் கிடைக்க இந்த பொறுப்பை 130 கோடி மக்களும் ஏற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதன் மூலம் பரம்பரை பரம்பரையாக ஒரு சிலர் மட்டுமே ஆதாயம் அனுபவித்தற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்த மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையும் இங்கு தேவை என்றார்.தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க மூன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் இதற்காக ஜல் ஜீவன் என்ற திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். திருவள்ளுவர் என்ற மகான்தான் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி யாரும் சிந்திக்காத காலத்தில் சிந்தித்தார் எனக் கூறிய பிரதமர் மோடி, நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளை மேற்கொள்காட்டி பேசினார்.Also see:
First published: August 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்