Home /News /national /

காந்தி பற்றி நியூயார்க் டைம்ஸில் கட்டுரை எழுதிய மோடி! மார்டின் லூதர் கிங்கைக் குறிப்பிட்டு புகழாரம்

காந்தி பற்றி நியூயார்க் டைம்ஸில் கட்டுரை எழுதிய மோடி! மார்டின் லூதர் கிங்கைக் குறிப்பிட்டு புகழாரம்

மரியாதை செலுத்தும் மோடி

மரியாதை செலுத்தும் மோடி

உலகில் உள்ள அனைவரும் கண்ணியத்தோடும், செழிப்போடும் வாழ வேண்டும் என கனவு கண்ட மகத்தான தலைவர் மகாத்மா காந்தி என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

  • News18
  • Last Updated :
    உலகின் ஒவ்வொரு மனிதனும் கண்ணியத்தோடும், செழிப்போடும் வாழ வேண்டும் என கனவு கண்ட மகத்தான தலைவர் மகாத்மா காந்தி என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் ஏட்டில் பிரதமர் நரேந்திர மோடி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்தியாவுக்கும், ஒட்டுமொத்த உலகுக்கும் ஏன் காந்தி தேவைப்படுகிறார் என்ற தலைப்பில் அந்த கட்டுரையை பிரதமர் எழுதியுள்ளார்.

    அதில் மனிதகுலத்தில் நிலவும் மிகப்பெரிய முரண்பாடுகளுக்கு இடையிலான பாலமாக செயல்படும் தனித்திறனை மகாத்மா காந்தி கொண்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலகில் உள்ள அனைவரும் கண்ணியத்தோடும், செழிப்போடும் வாழ வேண்டும் என கனவு கண்ட மகத்தான தலைவர் மகாத்மா காந்தி என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

    1959-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த மார்ட்டின் லூதர் கிங், மற்ற நாடுகளுக்கு தான் சுற்றுலாப் பயணியை போல செல்வதாகவும் ஆனால் மகாத்மா காந்தியின் இந்தியாவுக்கு ஒரு பக்தனை போல வந்துள்ளதாகவும் குறிப்பிட்டதை பிரதமர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். மகாத்மா காந்தி ஒரு புனித போராளி என நெல்சன் மண்டேலா தெரிவித்ததையும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Gandhi Jayanti

    அடுத்த செய்தி