“காங்கிரசின் 55 ஆண்டுகள் < பாஜகவின் 55 மாதங்கள்” பிரதமர் மோடி மக்களவையில் பேச்சு

தனது பேச்சில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிய பிரதமர் மோடி, தனது அரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுத்தார்.

“காங்கிரசின் 55 ஆண்டுகள் < பாஜகவின் 55 மாதங்கள்” பிரதமர் மோடி மக்களவையில் பேச்சு
மக்களவையில் பேசும் மோடி
  • News18
  • Last Updated: February 7, 2019, 8:28 PM IST
  • Share this:
காங்கிரஸ் தலைமையிலான அரசு 55 ஆண்டுகளில் செய்யாததை பா.ஜ.க. வெறும் 55 மாதங்களில் செய்துள்ளது என்று பிரதமர் மோடி மக்களவையில் இன்று பெருமிதமாக பேசியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத்தலைவர் உரை மீதான விவாத அமர்வு நடந்து வருகிறது. இன்று மாலை பிரதமர் மோடி இந்த அமர்வில் பேசினார். தனது பேச்சில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கிய அவர், தனது அரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுத்தார்.

“வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். எனது அரசு நேர்மையான அரசு, இளைஞர்கள் நேர்மைக்கு தான் வாக்களிப்பார்கள். முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்களை வரவேற்கிறேன்.


விமர்சனங்களை ஏற்க தயாராக இருக்கிறேன். ஆனால், விமர்சனங்கள் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக நாட்டை எதிர்க்கட்சிகள் குறை கூறுவதை ஏற்க முடியாது.

எனது அரசு நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் செயல்படுகிறது. ஊழலுக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு சாதனைகளையும் பாஜக கூட்டணி அரசு செய்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை பாஜக வழங்கி வருகிறது. ஊழல்வாதிகளின் சொத்துக்களை முடக்கியதால் அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.வாகன உற்பத்தியில் இந்தியா 4-வது இடம் பிடித்துள்ளது. மொபைல் போன் உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ளது. இரும்பு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது. பொருளாதார அடிப்படையில் உலகளவில் இந்தியா 11-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு 55 ஆண்டுகளில் செய்யாததை பா.ஜ.க. வெறும் 55 மாதங்களில் செய்துள்ளது.

நமது விமானப்படை வலுவாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பவில்லை. யாருடைய கட்டளையின் பேரில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தை காங்கிரஸ் ரத்து செய்ய சொல்கிறது? இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்துவிட்டது. மேலும், அனைத்து அரசியல் சட்ட அமைப்புகளையும் காங்கிரஸ் அவமதித்துவிட்டது.

தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு வாக்கு இயந்திரத்தை குறை கூறுகிறது. மாநில ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் 356-வது பிரிவு 50 முறை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று மோடி பேசினார்.

Also See...

First published: February 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்