பண்டிகைக் காலங்களில் உள்ளூர் பொருள்களை வாங்குங்கள் - மான் கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

பண்டிகைக் காலங்களில் உள்ளூர் பொருள்களை வாங்குங்கள் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் உள்ளூர் பொருள்களை வாங்குங்கள் - மான் கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்
பிரதமர் மோடி
  • Share this:
பிரதமர் மோடி, மனதின் குரலின் 70-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினர். அப்போது, தசரா திருவிழாவையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆண்டு மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாட்டங்கள் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்.

பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்கும்போது உள்ளூர் பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். காதி விற்பனை நிலையங்களில் விற்கப்படும் முக கவசங்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.


வரிசையாக பண்டிகைகள் வர உள்ளதால் தனிமனித இடைவெளியுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள்’ என்று தெரிவித்தார்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading