மக்களை பயமுறுத்தும் தீவிரவாதி போல மோடி இருக்கிறார் - விஜயசாந்தி கடும் தாக்கு

திரைத்துரையில் இருந்த விஜயசாந்தி 1998-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரானார். அடுத்து டிஆர் எஸ் கட்சியில் சேர்ந்து, அதிலிருந்து விலகி தற்போது காங்கிரசில் உள்ளார்.

மக்களை பயமுறுத்தும் தீவிரவாதி போல மோடி இருக்கிறார் - விஜயசாந்தி கடும் தாக்கு
விஜயசாந்தி
  • News18
  • Last Updated: March 9, 2019, 10:28 PM IST
  • Share this:
மக்களை விரும்புவதற்கு பதிலாக அவர்களை பயமுறுத்தும் தீவிரவாதி போல பிரதமர் மோடி இருப்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயசாந்தி பேசியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடந்தது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பியும் நடிகையுமான விஜயசாந்தி பிரதமர் மோடியை கடுமையாக தாக்கிப் பேசினார்.Loading...

“எப்போது மோடி குண்டு வீசுவார் என்று அனைவரும் பயத்துடனேயே இருக்கின்றனர். மக்களை விரும்புவதற்கு பதிலாக அவர்களை பயமுறுத்தும் தீவிரவாதி போல அவர் இருக்கிறார். ஒரு பிரதமர் எப்படி இருக்க வேண்டும் என்பது இது அல்ல” என்று விஜயசாந்தி விமர்சித்துப் பேசினார்.திரைத்துரையில் இருந்த விஜயசாந்தி 1998-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரானார்.
இதன் பின்னர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்த அவர், அக்கட்சியின் சார்பில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து விலகி, 2014-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Also See...  அம்பானி குடும்ப திருமணத்தில் ரஜினிகாந்த்

First published: March 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com