யோகி ஆதித்யநாத் நாட்டின் துரோகி! மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்

மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் யோகி ஆதித்யநாத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: April 4, 2019, 8:44 PM IST
யோகி ஆதித்யநாத் நாட்டின் துரோகி! மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்
வி.கே.சிங்
Web Desk | news18
Updated: April 4, 2019, 8:44 PM IST
இந்திய ராணுவத்தை, மோடியின் படை என்று கூறியவர்கள் நாட்டின் துரோகி என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேர்தல் பரப்புரைகளில் ராணுவம், தேசப்பற்று ஆகியவை குறித்து அதிகமாக பேசப்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் பிரசாரம் மேற்கொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்திய ராணுவத்தை பிரதமர் மோடியின் படை என்று குறிப்பிட்டார்.

“காங்கிரஸ் கட்சி தீவிரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து உபசரித்தது. ஆனால், மோடியின் படைகள் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கொடுத்துள்ளது” என்று ஆதித்யநாத் பேசினார்.

யோகி ஆதித்யநாத்தின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர் கட்சித் தலைவர்கள் யோகி ஆதித்யநாத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் யோகி ஆதித்யநாத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசிய வி.பி.சிங், ‘இந்திய ராணுவத்தை யாரும் மோடியின் படை என்று கூறினால், அவர்கள் நாட்டின் துரோகிகள். இந்திய ராணுவம், நாட்டுக்குச் சொந்தமானது. ராணுவம், எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானது கிடையாது. நீங்கள், ராணுவத்தைப் பேசுகிறீர்கள் என்றால், ராணுவத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள்.

சில நேரங்களில், நாம் கட்சித் தொண்டர்களைப் பற்றி பேசும்போது, மோடியின் படை, பா.ஜ.கவின் படை என்று பேசுவோம். அதுவேறு. ஆனால், ராணுவத்தைப் பற்றி பேசக் கூடாது’ என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர், ஒருவர் பா.ஜ.க முதல்வரை கடுமையாக விமர்சிப்பது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்:Also see:

First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...