இந்திய எல்லைக்குள் சீனா பெரிய கிராமம் ஒன்றை கட்டமைத்ததாக கூறப்படும் விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பயந்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சீனாவுக்கு எதிராக மத்திய அரசிடம் வியூகம் எதுவும் இல்லாததால் தேசப்பாதுகாப்பு, மன்னிக்க முடியாத அளவுக்கு சமரசத்துக்கு ஆளாகியிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் இருந்தே எல்லை விவகாரத்தில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லடாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதே போல சீன தரப்பிலும் உயிர்பலி ஏற்பட்டது. இதன் நீட்சியாக அருணாச்சல பிரதேசத்திலும் எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
Also Read:
மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு அருகே சமீபத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்திய எல்லைக்குள் சீனா பெரிய கிராமம் ஒன்றை கட்டமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. திபெத் மற்றும் அருணாச்சல் பிரதேச எல்லை அருகே பெரிய கிராமம் ஒன்றை சீனா கட்டமைத்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பான செயற்கைகோள் படம் ஒன்றும் வெளியானது.
Also Read:
அரசியலில் அடியெடுத்து வைக்கும் பிரபல அரசியல் குடும்பத்தின் 7வது வாரிசு...
சீனாவின் சட்டவிரோத செயலை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது. ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், நம் எல்லைக்குள் சீனா கிராமம் எதையும் நிறுவவில்லை என கூறியிருந்தார். இருப்பினும், சீனா கிராமத்தை நிறுவியதா இல்லையா என்பது உறுதியாகவில்லை.
இந்நிலையில் சீனாவுடனான எல்லை விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகமும், தலைமை ராணுவ தளபதிக்கும் இடையே வெவ்வேறு நிலைப்பாடு இருப்பதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பேசியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி, சீனாவுடனான எல்லை விவகாரத்தில் மத்திய அரசிடம் எந்த வியூகமும் இல்லை என்பதால் நாட்டின் பாதுகாப்பில் சமசரம் ஏற்பட்டுள்ளது. மோடி பயந்து போயிருக்கிறார்.
என்னுடைய எண்ணமெல்லாம் நாட்டின் எல்லைகளை தங்களின் உயிரை பணயம் வைத்து பாதுகாக்கும் ராணுவ வீரர்களுடனே உள்ளது. மத்திய அரசு பொய் பேசி வருகிறது” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.