வரலாற்று சிறப்புமிக்க ’அடல்’ சுரங்கப் பாதை - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

வரலாற்று சிறப்புமிக்க ’அடல்’ சுரங்கப் பாதை - பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: October 3, 2020, 2:30 PM IST
  • Share this:
இமாச்சல பிரதேசம் மணாலியிலிருந்து- லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு வரை, 9 கிலோமீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை சுரங்கப் பாதை அமைக்க, 2000-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்தது. இந்தப் பணிகளுக்கு 2002ம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதனைதொடர்ந்து பல்வேறு இயற்கை பேரிடர் சவால்களை கடந்து, "அடல்" நெடுஞ்சாலை சுரங்கப் பாதை வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

அவருடன் முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ தளபதி எம்.எம்.நரவானேவும் உடனிருந்தனர். இந்த சுரங்கப் பாதை மூலம், மணாலி - லே இடையேயான தூரம் 46 கிலோமீட்டர் குறைவதுடன், 4 முதல் 5 மணிநேரம் வரை பயண நேரம் குறையும். இமாச்சலப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிக்கும், லடாக்குக்கும் இடையே ஆண்டு முழுவதும் பயணம் மேற்கொள்ள முடியும். 8 மீட்டர் அகலத்துக்கு இரண்டு வழிப் பாதையாகயும், 5 புள்ளி 525 மீட்டர் உயரம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

 
First published: October 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading