ரஃபேல் - ஹெச்ஏஎல் நிறுவனத்தின் எதிர்காலம் அழிக்கப்பட்டுள்ளது - ராகுல் காந்தி

ரஃபேல் - ஹெச்ஏஎல் நிறுவனத்தின் எதிர்காலம் அழிக்கப்பட்டுள்ளது - ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
  • News18
  • Last Updated: October 14, 2018, 2:27 PM IST
  • Share this:
ரஃபேல் ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிஸ் நிறுவனத்திடமிருந்து பறித்து, அனில் அம்பானிக்கு அளித்ததன் மூலம், இந்திய விமான தயாரிப்பு நிறுவனத்தின் எதிர்காலம் அழிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவன ஊழியர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ஹெச்ஏஎல் என்பது சாதாரணமான ஒரு நிறுவனம் அல்ல என்றும், அது இந்தியாவின் மிக முக்கியமான சொத்து என்றும் குறிப்பிட்டார். எச்ஏஎல் நிறுவன ஊழியர்களின் நாட்டுக்கு செய்யும் பணி மகத்தானது என்றும், அதற்காக நாடு அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக எச்ஏஎல் ஊழியர்களைச் சந்திப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்தத்தில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு பதில் அனில் அம்பானி நிறுவனத்தை இணைத்ததன் மூலம், எச்ஏஎல் நிறுவனத்தின் எதிர்காலம் அழிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். ஹெச்ஏஎல் நிறுவனம், ராகுல்காந்தியை தன் ஊழியர்கள் சந்திக்கக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில், ராகுல்காந்தியை அந்த ஊழியர்கள் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
First published: October 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading