விவசாயிகள் & வணிகர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டம் - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

Kisan Maan Dhan Yojana | 60 வயது வரை இந்தத் தொகையை செலுத்த வேண்டும். இதற்கு இணையான தொகையை மத்திய அரசும் வழங்கும். 

news18
Updated: September 12, 2019, 8:52 AM IST
விவசாயிகள் & வணிகர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டம் - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
கோப்புப்படம்
news18
Updated: September 12, 2019, 8:52 AM IST
விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.

விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 5 கோடி சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும், வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெறும் விழாவில் இந்தத் திட்டத்தை பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.


விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சேரலாம்.

வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில், ஆண்டு விற்றுமுதல் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ள வணிகர்கள் சேரலாம். கடை வைத்திருப்போர், சில்லறை வர்த்தகர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், எண்ணெய் ஆலை உரிமையாளர்கள், தரகு முகவர்கள், ரியல் எஸ்டேட் தரகர்கள், சிறு ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சேரலாம். மகளிர் சுயஉதவிக் குழுவினரும் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பங்களிப்பு அடிப்படையிலான இந்த ஓய்வூதியத் திட்டங்களில் சேர்வதற்கான வயதுவரம்பு 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். இதற்காக பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணமான 30 ரூபாயை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

விவசாயிகள் மற்றும் வணிகர்களின் மாதாந்திர பங்களிப்புத் தொகை, எந்த வயதில் பதிவுசெய்கிறார்கள் என்ற அடிப்படையில், 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இருக்கும்.

குறிப்பாக, 29 வயதில் சேர்வோருக்கு பங்களிப்புத் தொகை, 100 ரூபாயாக இருக்கும். இந்த பங்களிப்புத் தொகையை, பொது சேவை மையம் மூலம் செலுத்தலாம்.

60 வயது வரை இந்தத் தொகையை செலுத்த வேண்டும். இதற்கு இணையான தொகையை மத்திய அரசும் வழங்கும்.

ஓய்வுபெறும் வயதுக்கு முன்னதாகவே, பயனாளி இறந்துவிட்டால், அந்தத் திட்டத்தை மனைவி தொடரலாம்.

தொடர விரும்பாவிட்டால், அதுவரை செலுத்திய தொகையை வட்டியுடன் மனைவி பெறுவார். ஓய்வு வயதுக்கு பின் பிறகு, பயனாளி இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு 50 சதவீத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியமாக கிடைக்கும்.

இந்தத் திட்டத்தை ஆயுள் காப்பீட்டு கழகம் செயல்படுத்த உள்ளது.

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...