’இந்திய சொத்துக்களை முதலாளித்துவ நண்பர்களுக்கு கைமாற்ற மோடி அரசு திட்டம்’ - ராகுல் காந்தி ட்வீட்..

’இந்திய சொத்துக்களை முதலாளித்துவ நண்பர்களுக்கு கைமாற்ற மோடி அரசு திட்டம்’ - ராகுல் காந்தி ட்வீட்..

ராகுல் காந்தி

பலரின் வாழ்வைக் காப்பாற்ற சுகாதாரத்தின் மீது, எல்லையைக் காக்க பாதுகாப்புத்துறையிலும் செலவினத்தை அதிகரிக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டிருந்தார் ராகுல் காந்தி.

 • Share this:
  மக்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதை மறந்து, இந்திய சொத்துக்களை முதலாளித்துவ நண்பர்களுக்கு அளிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

  ஒருங்கிணைந்த பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, ‘குறு, சிறு, நடுத்தர தொழிற்துறைகள், விவசாயிகள், பணியாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் எனவும், பலரின் வாழ்வைக் காப்பாற்ற சுகாதாரத்தின் மீது, எல்லையைக் காக்க பாதுகாப்புத்துறையிலும் செலவினத்தை அதிகரிக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டிருந்தார் ராகுல் காந்தி.


  வெளியாகி இருக்கக்கூடிய மத்திய பட்ஜெட்டின் மொத்த அளவு என்பது 34 லட்சத்து 83,000 கோடி ரூபாய். இதில், மத்திய அரசுக்கு வரும் வருமானத்தில், ஒரு ரூபாயில், 36 காசுகள் கடன்காக பெறப்படுகிறது. வரி அல்லாத வருவாயாக 6 காசுகள் கிடைக்கின்றன. சுங்க வரியாக 3 காசுகளும், ஜிஎஸ்டி மூலம் 15 காசுகளும் கிடைக்கின்றது. கார்ப்ரேசன் வரியாக 13 சதவிதமும், யூனியன் உற்பத்தி வரியில் இருந்து 8 காசுகளும் கிடைக்கின்றன. வருமான வரியில் இருந்து 14 காசுகளும், கடன் அல்லாத மூலதனம் மூலமாக 5 காசுகளுக்கும் கிடைப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

  இதில் செய்யப்படும் செலவும் என்பதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. வருவாயாக வரும் ஒவ்வொரு ரூபாயிலும், மத்திய அரசு உதவியுடன் நடைபெறும் திட்டங்களுக்கு 9 காசுகளும், ஓய்வூதியத்திற்கு 5 காசுகளும் செலவு செய்யப்படுகிறது. மற்ற செலவுகள் என்ற அடிப்படையில் 10 காசுகள் செலவு செய்யப்படுகிறது. மத்திய அரசு நேரடியாக மேற்கொள்ளும் திட்டங்களுக்கு 14 காசுகளும், மானியமாக 8 காசுகளும் செலவு செய்யப்படுகிறது. ராணுவத்துறைக்கு 8 காசுகளும், பெறப்பட்ட கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டிக்கு மட்டும் 20 காசுகளும் செலவு செய்யப்படுகிறது. நிதி கமிஷனுக்கு 10 காசுகளும், மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் வரி பகிர்வாக 16 காசுகளும் செலவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
  Published by:Gunavathy
  First published: