இந்தியா, இஸ்ரேல் இடையே 2017-இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்ததாக புகழ்பெற்ற தி நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் படிக்க .. இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா - இன்று ஒரே நாளில் 2.35 லட்சம் பேர் பாதிப்பு
இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்க, உச்ச நீதிமன்றத்தால் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் இப்போது மீண்டும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள புதிய செய்திக் கட்டுரை இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற காரணமாக அமைந்துள்ளது. 'இந்தியா, இஸ்ரேல் இடையே 2017-இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்ததாக புகழ்பெற்ற தி நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், "2017ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது அவரும் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அதில், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்புடைய ஒப்பந்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் பெகாசஸ் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்தன. சில மாதங்களுக்குப் பிறகு நெதன்யாகு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
மேலும் படிக்க... ஒரு காலத்தில் என்சிசியில் தீவிர உறுப்பினராக இருந்தேன்.. பிரதமர் மோடி பெருமிதம்!
இதன்பிறகு, 2019 ஜூன் மாதத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்பு ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பார்வையாளராக இணைவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசு நாட்டிற்கு துரோகம் செய்துள்ளதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "நமது முக்கிய ஜனநாயக நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸை வாங்கியது. அரசு அலுவலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், நீதித்துறை என அனைவரும் தொலைபேசி மூலம் ஒட்டு கேட்கப்பட்டுள்ளனர். இது தேசத்துரோகம் ஆகும். மோடி அரசு தேசத்திற்கே துரோகம் செய்ததுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.