Home /News /national /

கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து புகழின் உச்சியில் மோடி அரசு- கருத்துக் கணிப்பு

கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து புகழின் உச்சியில் மோடி அரசு- கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அரசின் புகழ் உச்சத்துக்குச் சென்றுள்ளதாக லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய கருத்துக் கணிப்புத் தகவல் ஒன்று கூறுகிறது.

    கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அரசின் புகழ் உச்சத்துக்குச் சென்றுள்ளதாக லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய கருத்துக் கணிப்புத் தகவல் கூறுகிறது.

    வானளாவ உயரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை, பணவீக்கம், வேலையின்மை போன்ற கவலைகள் இருந்த போதும் மோடி அரசின் புகழுக்கு எந்த வித பங்கமும் ஏற்பட்டு விடவில்லை என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு. அதாவது 2வது முறை ஆட்சிய மோடி பிடித்த பிறகே எதிர்பார்ப்புகளை சரியாக சந்தித்து வருவதாகவும் பூர்த்தி செய்து வருவதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

    லோக்கல் சர்க்கிள்ஸ் சுமார் 64,000 பேர்களிடம் கருத்து கேட்டது, அதில் 67% பேர் மோடி அரசு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருவதாக தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 51% அதிகமாகும். 2020-ல் தொற்று தொடங்கிய போது 62% ஆக இருந்தது, இரண்டாவது அலையின் போது இது 51% ஆக குறைந்தது தற்போது மீண்டும் அதிகமாகி உள்ளது.

    கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் மத்திய அரசு 3வது அலை வந்தால் அதைக் கையாள தயாராகவே உள்ளதாக நம்புவதாக இந்தக் கருத்துக் கணிப்பாளர்களிடம் கூறிஉள்ளனர். இதை விட முக்கியாமது 37% மக்கள் வேலையின்மை விவகாரத்தை மோடி அரசு கையாளும் விதத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இந்த அரசு காற்றின் மாசு சேர்தல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தவில்லை என்று சிலர் கூறியுள்ளனர். மத ஒற்றுமையை திறமையுடன் மோடி அரசு ஏற்படுத்துவதாக 67% பேர் சொல்ல 33% பேர் மறுத்தனர்.

    50%க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் வர்த்தகம் செய்வது மோடி அரசின் கீழ் எளிதாகியுள்ளது என்று கூறியதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளன. இந்தியாவின் சில்லரை விற்பனை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தாலும் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பலர் மத்திய அரசு பொருளாதாரத்தை நன்றாகவே கையாள்கிறது என்று கூறியுள்ளனர்.

    ஆனால் கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டவர்களில் 47% பேர் வேலையின்மை விவகாரத்தை மோடி அரசு சரியாக கையாளவில்லை அல்லது அதுபற்றி பேச்வில்லை என்று தெரிவித்ததாக லோக்கல் சர்க்கிள்ஸ் கருத்துக் கணிப்புக் கூறுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: MODI GOVERNMENT

    அடுத்த செய்தி