மோடி அரசின் ஆளுநர்கள் நியமனம்: எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம்

கோப்புப் படம்

மோடி அரசு நியமித்த ஆளுநர்களில் எஸ்.பி பிரிவினருக்கும், எஸ்.டி பிரிவினருக்கு குறிப்பிடத்தக்க அளவில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
இந்தியாவில் பிரதமர், முதலமைச்சர் பதவிகளைப் போலவே மிகவும் உயரிய பதவிகளாக குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பதவிகள் இருந்துவருகிறது. இதில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பதவிகளைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு அதிகாரம் கிடையாது. குடியரசுத் தலைவர் பதவியைப் பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால், ஆளுநர் பதவி என்பது மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்யும் ஒரு பதவியாகும். ஒரு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ அரசாணைகள் ஆளுநரின் கையொப்பத்தின்படியே வெளிவரும். யூனியன் பிரதேசங்களில் முதல்வரை விட ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் இருந்துவருகின்றன. இந்தநிலையில், இந்தியாவின் எட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய ஆளுநர்களை நியமனம் செய்துள்ளது. ஆளுநர் நியமனங்களில் மோடி அரசு எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் கொடுத்துள்ளது.

தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள எட்டு ஆளுநர்களில் 3 பேர் எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர்கள். தற்போது மத்திய அமைச்சரும், கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தாவர்சந்த் கெல்லாட் பா.ஜ.கவின் முக்கியமான எஸ்.சி பிரிவின் தலைவராவார்.

இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர அர்லேகரும் எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவராவார். திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சத்யதேவ் நாராயன் ஆர்யா எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவர். ஏற்கெனவே, உத்தரகாண்ட் ஆளுநராக உள்ள பேபி ராணி மவுரியா எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவர்.

மத்தியப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மங்குபாய் படேல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவராவார். சத்திஸ்கர் மாநில ஆளுநராக உள்ள அனுஷுயா உய்கேவும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவராவார்.

இதர பிறப்படுத்தப்பட்ட சமூக ஆளுநர்கள்:

பீகார் மாநில ஆளுநராக உள்ள பாகு சவுஹான் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் லோனியா சாதியைச் சேரந்தவர். ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் பைஸ் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஹரியானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பண்டாரு தட்டார்யா, சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கங்கா பிரசாந்த் சவுராசியா, தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜாட் சமூக ஆளுநர்கள்:

இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் ஆளுநர்களாக உள்ளனர்.

மேற்கு வங்க ஆளுநராக உள்ள ஜக்தீப் தான்கர், குஜராத் மாநில ஆளுநராக உள்ள அச்சார்யா தேவ்ரத், மேகலாயா மாநில ஆளுநராக உள்ள சத்யபால் மாலிக் ஆகியோர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இஸ்லாமிய ஆளுநர்கள்:

கேரள மாநில ஆளுநராக உள்ள ஆரிப் முகம்மது கான், மணிப்பூர் மாநில ஆளுநராக உள்ள நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பன்டாரு தட்டாச்சார்யா, ஹரி பாபு ஆகிய இருவர் தெலுங்கு மொழி பேசும் ஆளுநர்களாக உள்ளனர்.
Published by:Karthick S
First published: