மோடி அரசின் 7வது ஆண்டு விழாவைக் கொண்டாடவில்லை: கொரோனா நிவாரண நடவடிக்கையில்தான் கவனம்- பாஜக எம்.பி. தகவல்

பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்று 7 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து, நாடுமுழுவதும் ஒரு லட்சம் கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் பாஜக தலைவர்கள் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

 • Share this:
  பிரதமர் அரசின் 7-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இதுவரை மக்களுக்கு 30 லட்சம் குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களை பாஜக தொண்டர்கள் வினியோகம் செய்துள்ளனர்,18 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளதாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  இது குறித்து பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான அனில் பலூனி பிடிஐயிடம் கூறுகையில், “நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால், மோடி அரசின் 7-வது ஆண்டு விழாவை பாஜக கொண்டாடவில்லை. அதற்குப் பதிலாக மத்திய அமைச்சர்கள் முதல் கிாாமங்களில் பூத் அளவில் இருக்கும் நிர்வாகிகள் வரை கொரோனா விழிப்புணர்வு, நிவாரண நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

  இதன்படி நாடுமுழுவதும் ஒரு லட்சம் கிராமங்களில் மத்திய அமைச்சர்கள் முதல் பூத் நிர்வாகிகள் வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு நடவடிக்கை, நிவாரணப் பணிகளில் ஈடுபடுவார்கள். பிரதமர் மோடி தலைமையிலான் 7-வது ஆண்டு விழாவை சேவை நாள் என்று கொண்டாட உள்ளோம். இந்த நாளில் பாஜக தொண்டர்கள், நிர்வாகிள், அனைவரும் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும்.

  பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள், மத்தியஅமைச்சர்கள் எனப் பலரும் ஞாயிற்றுக்கிழமையன்று பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள கிராமங்களளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள். குறைந்த பட்சம் பாஜக தலைவர்கள் இரு கிராமங்களில் நிவாரணப் பணிகளையும், கொரோனா தடுப்பு நடவடிக்ைககளிலும் ஈடுபடுவார்கள்.

  பிரதமர் அரசின் 7-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இதுவரை மக்களுக்கு 30 லட்சம் குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களை பாஜக தொண்டர்கள் வினியோகம் செய்துள்ளனர்,18 லட்சம் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளனர்.

  கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஏராளமான பாஜக தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர், பாஜக சார்பில் 4 ஆயிரம் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

  இவ்வாறு பலூனி தெரிவித்தார்.
  Published by:Muthukumar
  First published: