• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எதிர்கட்சிகளின் அவதூறு பிரச்சாரத்திற்கிடையே மோடி அரசின் இமாலய தடுப்பூசி சாதனை - ஜே.பி.நட்டா

எதிர்கட்சிகளின் அவதூறு பிரச்சாரத்திற்கிடையே மோடி அரசின் இமாலய தடுப்பூசி சாதனை - ஜே.பி.நட்டா

ஒட்டுமொத்த தேசத்தின் முன்னுரிமையும் கொரோனாவுக்கு எதிரானதாகவே இருக்கும் போது எதிர்கட்சியினர் மட்டும் மோடியை எதிர்ப்பதே முன்னுரிமையாக கொண்டிருந்தனர். தொடக்கத்தில் இது ‘பாஜக தடுப்பூசி’ என முத்திரை குத்தியதில் தொடங்கி பல்வேறு செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

  • Share this:
கொரோனாவுக்கு எதிரான போரில் உலகின் மாபெரும் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை கடந்த ஜனவரி 16 2021 அன்று இந்தியா தொடங்கியது. இப்போது வெறும் 9 மாதங்களில் நாம் பிரம்மாண்டமாக 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதித்திருக்கிறோம். தடுப்பூசி போட தகுதிவாய்ந்த 18 வயதிற்கு மேற்பட்டோரில் 74%-க்கும் அதிகமானோர் தற்போது ஒரு டோஸாவது போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவை விட தாமதமாக...

உலக நாடுகள் 7 பில்லியன் (700 கோடி) தடுப்பூசி டோஸ்களை செலுத்தியிருக்கிறது, ஆனால் இந்தியா மட்டுமே இதில் 1 பில்லியன் டோஸ்கள் செலுத்தியுள்ளது. நம்முடைய வேக்ஸின் ட்ரைவ் ஆனது அமெரிக்காவை விட ஒரு மாதம் தாமதமாகத்தான் தொடங்கியது, ஆனால் அமெரிக்காவை விட இரு மடங்கு கூடுதலாக நாம் தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம் என்பதே உண்மை. அமெரிக்கா 40.7 தடுப்பூசி டோஸ்கள் தான் செலுத்தியிருக்கிறது. அதாவது உலகின் தடுப்பூசி செலுத்தியவர்களில் இந்தியாவின் பங்கு மட்டும் 14%. உலக ஜி.டி.பி பங்களிப்பில் இந்தியாவின் பங்கு 3.5% மட்டுமே என்ற போதிலும் அனைத்து நாடுகளைக் காட்டிலும் நாம் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இதுதவிர பல்வேறு தடங்கல்கள், சவால்கள் நம் முன்னே இருந்தது, அனைத்தையும் தகர்த்துள்ளது இந்தியா.

ஐரோப்பிய யூனியனை மிஞ்சியது:

ஹிமாச்சல் பிரதேசம், கோவா, சிக்கிம், தாத்ரா & நாகர் ஹவேலி, டாமன் & டையு, லடாக் மற்றும் லஷ்சதீப் போன்ற இந்த 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மட்டுமே ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனை விட அதிக அளவில் தடுப்பூசிகள் செல்லுத்ஹ்டப்பட்டிருக்கின்றன. இங்கு மட்டும் 100% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸாவது போடப்பட்டிருக்கிறது. இதே போல உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா மாநிலங்கள் மட்டுமே, சவுதி அரேபியா, ஈரான், ஆஸ்திரேலியா, பெரு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளைக் காட்டிலும் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி பிறந்தநாளில் உலக சாதனை:

கடந்த சில வாரங்களில் 5 நாட்கள், ஒரே நாளில் ஒரு கோடி டோஸ்களுக்கும் கூடுதலாக தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம். செப்டம்பர் 17, பிரதமர் மோடியின் பிறந்த நாள் அன்று 2.5 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா இமாலய சாதனை புரிந்தது. தடுப்பூசி செலுத்துவதை மாநிலங்கள் தாங்களாகவே செய்து கொள்ளுவதாக கோரிக்கை வைத்த போதும், அது பலனளிக்காததால் மத்திய அரசு தடுப்பூசி போடும் பணியினை முழுமையாக தன்னகத்தே எடுத்துக் கொண்ட பின்னர் இந்த பணி வேகமெடுத்தது.

Modi


இந்தியாவின் தடுப்பூசி இயக்கம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுடன் தொடங்கியது. பின்னர் Zycov-D என்ற உலகின் முதல் டிஎன்ஏ வேக்ஸினை இந்தியா உருவாக்கியது. ஒரு தொழிற்சாலையில் தடுப்பூசி உற்பத்தியாகி அது பரிசோதனைக்காக சென்று, பின்னர் நாட்டின் கடைக்கோடி பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவை அனைத்தும் தடுப்பூசியின் பரிந்துரைக்கப்பட்ட காலநிலையில் பராமரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படுகிறது என்றால் கற்பனை செய்து பாருங்கள் இது எத்தனை பெரிய விஷயம் என்று. 100 கோடி டோஸ்களை அனுப்பி வைக்க எத்தனை ட்ரக்குகள், விமானங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை குளிர்பதன கிடங்குகள்? எத்தனை சிரிஞ்சுகள், ஊசிகள் போக்குவரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்? இவற்றையெல்லாம் மத்தியமாக கணக்கிட உலகின் சிறந்த Cowin தொழில்நுட்ப கருவியை இந்தியா உருவாக்கி வைத்திருந்தது.

விஐபி கலாச்சாரம் இல்லாமல்..

மேலும் இதில் முக்கியமாக தடுப்பூசி செலுத்துவதில் விஐபி கலாச்சாரம் இருக்கக் கூடாது என்பதை பிரதமர் மோடியே முன்னின்று உறுதி செய்தார். யாரும் வரிசையை மீறி வர முடியாத வகையில் செயல்பாடுகள், இருந்தன. இதன் மூலம் ஏழை - பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் தடுப்பூசி அனைவருக்கும் சென்று சேர்ந்தது.

முதல் டோஸை ஒரு இடத்திலும் இரண்டாவது டோஸை வேறு ஒரு இடத்திலும் கூட எடுத்துக் கொள்ள Cowin தளம் உதவியது. மேலும் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு அது நினைவூட்டல்களையும் அனுப்பியது.

மோடி எதிர்ப்பு அரசியல்:

ஒட்டுமொத்த தேசத்தின் முன்னுரிமையும் கொரோனாவுக்கு எதிரானதாகவே இருக்கும் போது எதிர்கட்சியினர் மட்டும் மோடியை எதிர்ப்பதே முன்னுரிமையாக கொண்டிருந்தனர். தொடக்கத்தில் இது ‘பாஜக தடுப்பூசி’ என முத்திரை குத்தியதில் தொடங்கி பல்வேறு செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டனர். கொரோனா விவகாரத்தை அவர்கள் தவறாக கையாண்டு, பழியை மட்டும் மத்திய அரசின் மீது போட்டு மலிவான அரசியலில் ஈடுபட்டனர். சர்வதேச அளவில் இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கும் என்று கூட யோசிக்காமல், டூல்கிட்டை பயன்படுத்தி மோடி அரசை குறைகூறினர்.

உதாரணமாக உத்தரப்பிரதேசத்தை பாருங்கள். 24 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட இம்மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு பல வாரங்களாக 50க்கும் கீழ் தான் உள்ளது, மேலும் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் 150 என்ற அளவிலே தான் உள்ளனர். ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை உ,பியில் பலி எண்ணிக்கை 23,000 தான். இந்தியாவின் மக்கள் தொகையில் 17 - 18% கொண்ட உ.பியில் பலி எண்ணிக்கை 5% தான். 11.7 கோடி டோஸ்களுக்கு மேல் அங்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இது தான் இந்தியாவில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலம், மேலும் பரிசோதனையிலும் ( 8 கோடி) கூட உ.பி தான் முதலிடம்.

கோவிட் மாடல் என தம்பட்டம் அடித்துக் கொண்ட, பெரிதும் கொண்டாடப்பட்ட மாநிலம், அதுவும் 11-12 % மக்கள் தொகை பங்களிப்பை கொண்ட அந்த மாநிலம் பல வாரங்களாக நோய்ப்பரவலிலும், பலி எண்ணிக்கையிலும் 50 - 60% பங்களிப்பை தந்தது. 3.5 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளா, உ,பியின் மக்கள் தொகையில் வெறும் ஏழில் ஒரு பங்கு தான். நல்ல சுகாதார கட்டமைப்பு உள்ளது, ஆனாலும் அங்கு துரதிர்ஷ்டவசமாக பலி எண்ணிக்கை 25,500 ஆக இருக்கிறது.

கும்பமேளா, கன்வார் யாத்திரை என கொரோனா பரவலுக்காக பாஜக ஆளும் மாநிலங்கள் மீது அவதூறு பரப்பிய எதிர்கட்சியினர், அதிக கொரோனா பாதிப்பு பதிவாகி வந்த போதிலும் ஈகை திருநாளுக்காக தளர்வுகளை அளித்த கேரளாவை உச்சநீதிமன்றமே கண்டித்த போதிலும் அமைதி காத்தனர்.

கவலையளிக்கும் வகையில், அரைவேக்காட்டுத்தனமான உண்மைகள், பாரபட்சமாக கதைகள் கூறும் அரசியல் வெறுப்பு மனப்பான்மை, வசதியான பாசாங்குத்தனம், அறிவுசார் நேர்மையின்மை போன்றவற்றிற்கு இன்னும் தடுப்பூசி கண்டறியப்படவில்லை, இன்று நாம் செய்திருக்கும் தடுப்பூசி சாதனை ஒரு கட்சியின் அல்லது ஒரு அரசின் சாதனை கிடையாது, இது ஒட்டுமொத்த தேசத்தின் சாதனை. உங்களுக்கு பிடிக்காத ஒருவரின் (மோடி) தலைமையின் கீழ் நாடு புதிய உச்சங்களை தொடுகிறது என்பதற்காக நம்முடைய ஆராய்ச்சியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் நாட்டு மக்களை இகழாதீர்கள். பொய் பிரச்சாரம் தடுப்பூசியின் சாதனைகள் மூலம் தோற்கடிக்கப்படும்.

பெருந்தொற்றின் போது சமூகத்திடமிருந்து, அரசியல் ரீதியாகவும் நாம் இடைவெளிவிடக்கூடாது. நாம் ஒன்றிணைய வேண்டும். தனிப்பட்ட காரணங்களை விட தேச நலன் முக்கியம். எனவே வாருங்கள், ஒன்றிணைந்து 100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை கொண்டாடுவோம். அந்நிய பெருந்தொற்றை பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் முறியடிக்க ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: