பிரதமர் மோடிக்கு ரஷியாவின் மிக உயரிய விருது!

இரு நாட்டு உறவை மேம்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக ரஷிய தூதரகம் கூறியுள்ளது.

பிரதமர் மோடிக்கு ரஷியாவின் மிக உயரிய விருது!
புதின் மற்றும் மோடி.
  • News18
  • Last Updated: April 12, 2019, 4:08 PM IST
  • Share this:
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷியாவின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்ட்ல்’ விருது வழங்க உள்ளது.

இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக ரஷியா உள்ளது. இந்தியாவில் பாரத ரத்னா போன்று ரஷியாவில் ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்ட்ல்’ என்ற மிக உயரிய விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதர் மோடிக்கு, ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்ட்ல்’ விருதை வழங்குவதற்கு ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.


இரு நாட்டு உறவை மேம்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக ரஷிய தூதரகம் கூறியுள்ளது. எனினும், இந்த விருது மோடிக்கு எப்போது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading