உச்ச நீதிமன்றத்திலும் காங்கிரஸ் குறை காண்கிறது! - பிரதமர் மோடி கடும் கண்டனம்
உச்ச நீதிமன்றத்திலும் காங்கிரஸ் குறை காண்கிறது! - பிரதமர் மோடி கடும் கண்டனம்
பிரதமர் மோடி
ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் காங்கிரசார், பாதுகாப்பு அமைச்சர் கூறும் விளக்கத்தை ஏற்கவில்லை. விமானப் படை உயரதிகாரிகள் சொல்லும் விளக்கத்தை ஏற்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் கூட காங்கிரஸ் கட்சி குறை காண்கிறது என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, ரேபரேலி-பாண்டா நான்கு வழி நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். பின்னர், 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.
அதன்பின்னர், ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை மைதானத்தில் பேசிய மோடி, ‘ரேபரேலியின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை. ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் காங்கிரசார், பாதுகாப்பு அமைச்சர் கூறும் விளக்கத்தை ஏற்கவில்லை. விமானப் படை உயரதிகாரிகள் சொல்லும் விளக்கத்தை ஏற்கவில்லை. பிரான்ஸ் அரசாங்கத்தின் விளக்கத்தையும் ஏற்கவில்லை.
தற்போது, உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பையும் ஏற்க மறுக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தையும் குறை காண்கிறார்கள். பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரன் அரசின் மெத்தனப்போக்கை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. கார்கில் போருக்குப் பிறகு, நமது நாட்டின் விமானப் படையை அதிநவீனப்படுத்த வேண்டும் என பலமுறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை. அகஸ்டா வெஸ்ட்லேண்டு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரைப் பாதுகாக்க காங்கிரஸ் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞரை அனுப்பியதை அனைவரும் பார்த்தனர்’ என்று தெரிவித்தார். Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.