ஜின்பிங்குடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு உந்துசக்தியாக இருக்கும்! மோடி பெருமிதம்

news18
Updated: October 12, 2019, 2:58 PM IST
ஜின்பிங்குடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு உந்துசக்தியாக இருக்கும்! மோடி பெருமிதம்
மோடி, ஷி ஜின்பிங்
news18
Updated: October 12, 2019, 2:58 PM IST
ஷி ஜின்பிங்குடனான சந்திப்பு முறைசாரா சந்திப்பு இந்தியா - சீனா உறவுகளுக்கு மேலும் உந்துசக்தியை அளிக்கும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையேயான இரண்டு நாள் முறைசாரா சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. நேற்று, மாலை 5 மணி அளவில் மாமல்லபுரம் சென்ற ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார். நேற்று, இரவு உரையாடிய படியே மாமல்லபுரம் சிற்பங்களைச் சுற்றிப் பார்த்தனர். இன்று, மீண்டும் கோவளத்திலுள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஹோட்டலில் மோடி, ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது.

அந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகள் இடையேயான முக்கிய விவாதங்கள் குறித்து ஆலோசனை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஷி ஜின்பிங்குடனான சந்திப்பு குறித்து மோடி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சந்திப்பு, இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading...


Also see:

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...