வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆடைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி

வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆடைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: December 15, 2019, 7:42 PM IST
  • Share this:
குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பான வன்முறைகளுக்கு காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே காரணம் என பிரமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தும்காவில் நடைபெற்ற பாஜகவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு வடகிழக்கு மாநில மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்று கூறினார்.

காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே வன்முறையைத் தூண்டி விடுவதாகவும் கூறினார். கலவரத்தை காங்கிரஸ் மவுனமாக பார்த்துக்கொண்டு ஆதரிப்பதால், இந்த சட்டம் நாட்டைப் பலப்படுத்த கொண்டுவரப்பட்ட சட்டம் என்பது உண்மையாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆடைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


குடியுரிமை சட்டத்திருத்தம் ஆயிரம் சதவீதம் சரியான முடிவு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டின் டுக்மாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களின் பின்னணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
First published: December 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading