முகப்பு /செய்தி /இந்தியா / வாரணாசி எம்.பி. எப்படிச் செயல்படுகிறார்?- மோடியின் திடீர் கேள்விக்கு பம்மிய உ.பி. பாஜக தலைவர்

வாரணாசி எம்.பி. எப்படிச் செயல்படுகிறார்?- மோடியின் திடீர் கேள்விக்கு பம்மிய உ.பி. பாஜக தலைவர்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

காசி எனப்படும் வாரணாசித் தொகுதியின் எம்.பி. பிரதமர் மோடிதான், கடந்த 2014, 2019 தேர்தல்களில் மோடி அங்கு வென்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சமீபத்தில் கொரோனா லாக் டவுன்களுக்குப் பிறகு பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது, அதில் பிரதமர் மோடி நிர்வாகிகளுக்கும் எம்.பி.க்களுக்கும் பல அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது திடீரென 'காசி எம்.பி. எப்படி இருக்கிறார். அவர் எப்படி செயல்படுகிறார்' என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். உடனடியாக பதிலளிக்க முடியாமல் உத்தர பிரதேசபா.ஜ. தலைவர் சுதந்திர தேவ் சிங் திணறினார்.

பா.ஜ. தேசிய நிர்வாகிகள் கூட்டம் டில்லியில் சமீபத்தில் நடந்தது. இதில் பா.ஜ.வின் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.திடீரென உத்தர பிரதேச மாநிலத் தலைவர் சுதந்திர தேவ் சிங்கை நோக்கி 'காசி தொகுதியின் எம்.பி. எப்படி இருக்கிறார்; எப்படி செயல்படுகிறார்' என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

சில விநாடிகள் திணறிய சுதந்திர தேவ் சிங் கைகளை குவித்து பிரதமர் நோக்கி புன்னகைத்தார். அப்போது கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

காசி எனப்படும் வாரணாசித் தொகுதியின் எம்.பி. பிரதமர் மோடிதான், கடந்த 2014, 2019 தேர்தல்களில் மோடி அங்கு வென்றார்.

பிப்ரவரி 21ம் தேதி நடந்த இந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். நிர்வாகிகள் ஜே.பி.நட்டா தலைமையின் கீழ் கருத்துடன் செயல்பட்டு அதிகார அரசியலைக் கைவிட்டு அதைக் கடந்து சென்று மக்கள் சேவையாற்ற வேண்டும் என்றார்.

கட்சியின் பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது, ‘நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒரு பெரும் தொகுப்பு, சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் அதில் பேசப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி நிர்வாகிகளுடன் இகவும் அன்னியோன்யமாக பேசினார். அதிகார அரசியல் அல்ல நம் குறிக்கோள் சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற மக்கள் சேவையே மகேசன் சேவை என்றார்.பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மேற்கொண்ட அனைத்து சீர்த்திருத்த நடவடிக்கைகள் விவசாயச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் ஆகிவற்றைப் பாராட்டி அரசியல் தீர்மானம் நிறைவேற்றினோம். கோவிட் 19 லாக் டவுன் காலத்தில் மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் ஆத்ம நிர்பர் திட்டத்தை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றினோம்’ என்றார்.

First published:

Tags: Modi, PM Modi, Varanasi Constituency