பொதுமக்கள் 100 சதவீதம் முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்தவேண்டும் - முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
கொரோனா பரவலைத் தடுக்க 100 சதவீதம் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிவதை முதல்வர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மோடி
- News18 Tamil
- Last Updated: June 16, 2020, 4:31 PM IST
கொரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் பேசினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 21 மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர், ‘லடாக் எல்லையில் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் இறந்தது வருத்ததைத் தருகிறது. ஒவ்வொரு இந்தியரையும் காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்தியாவின் ஊரடங்கு நடைமுறையை உலகமே பாராட்டியுள்ளது. ஒவ்வொரு உயிரிழப்பும் நமக்கு கவலைத் தருகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை.
கொரோனாவைக் கட்டுப்படுத்தினால் மேலும் தளர்வுகளை அறிவிக்க முடியும். வர்த்தகம் மீண்டும் வேகம் பெற நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும். 100 சதவீதம் முகக் கவசம் அணிவதை முதல்வர்கள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இந்தியாவின் ஊரடங்கு நடைமுறையை உலகமே பாராட்டியுள்ளது. ஒவ்வொரு உயிரிழப்பும் நமக்கு கவலைத் தருகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை.