ஹோம் /நியூஸ் /இந்தியா /

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அனைவரையும் டிபியை மாற்ற சொன்ன பிரதமர் மோடி

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அனைவரையும் டிபியை மாற்ற சொன்ன பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளை ஒட்டி, ஆகஸ்ட் 2 ஆம் தேதி அவரை நினைவுகூறும் வகையில், பிரதமர் மோடி அறிவுறுத்தல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே அனைத்து மாத இறுதி ஞாயிற்றுகிழமைகளிலும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடி வருகிறார். அந்த வகையில் இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 15 வரை அனைவரையும் சமூக வலைதளங்களில் தேசிய கொடியை டீபியாக வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில், வானொலியில் அவர், நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று வருகின்றனர்.

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நம் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள நமது கணக்குகளின் சுயவிவரப் படமாக ஆகஸ்ட் 2 முதல் 15 ஆம் தேதிவரை மூவர்ணக் கொடியை வைக்க வேண்டும்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று காலத்தில் மருத்துவப் பயன் உள்ள தாவரங்களின் ஆராய்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல ஆரம்பம்.

தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளை ஒட்டி, ஆகஸ்ட் 2 ஆம் தேதி அவரை நினைவுகூறும் வகையில், பிரதமர் மோடி அறிவுறுத்தினார். ஏற்கனவே ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற பிரதமர் மோடி அனைவரையும் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Independence day, Narendra Modi