2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அன்று மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சாகியா ஜாப்ரி என்பவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு தீர்ப்பு தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறை விசாரணையின் போது காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டம் குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், 'ஜனநாயகத்தில் அரசியல் சட்டத்தை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கு பிரதமர் மோடி சிறந்த உதாரணம். மோடியும் விசாரணையை எதிர்கொண்டார். ஆனால், அவர் யாரையும் திரட்டி போராட்டம் நடத்தச் சொல்லவில்லை. நானும் கைதானேன். அப்போதும் எந்த போராட்டம் நடத்தப்படவில்லை. நாங்கள் சட்டத்திற்கு முறையான ஒத்துழைப்பு வழங்கினோம். சிறப்பு புலனாய்வுக் குழு முன்னர் மோடி ஆஜரான போது எந்தவொரு எம்எல்ஏவோ, எம்.பியோ யாரும் தர்ணா நடத்தி ட்ராமா செய்யவில்லை. முதலமைச்சரே விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அவர் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு
எந்த நபரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. எங்கள் மீதான போலி புகார்களை குஜராத் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வில்லை. தொடர்ச்சியாக பொய் கதைகளை அரசியல் நோக்கத்துடன் கூறினாலும், மாநிலத்தில் பாஜக தான் தொடர்ந்து ஆட்சிக்கு வந்துள்ளது. 19 ஆண்டு காலம் பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் நோக்கத்துடன் பொய்கள் பரப்பப்பட்டது. இருந்தாலும் அதை ஆலகால விஷத்தை உண்ட சிவன் போல, மோடி அதை அமைதியாக பொறுத்துக்கொண்டார். தற்போது உண்மை வெளியே வந்து தங்கம் போல ஜொலிக்கிறது' என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Home Minister Amit shah, PM Modi