103 புதிய வேட்பாளர்கள்; வாக்கு வங்கிகளை ஒருங்கிணைத்தது! மோடி-அமித்ஷா இணை சாதித்தது எப்படி?

மோடி, அமித்ஷா

குடும்ப அரசியல் முறை அதிகமாக இருக்கும் இந்திய அரசியலில் பா.ஜ.கவின் வாக்காளர்கள் தேர்வு வித்தியாசமானதாக உள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சுதந்திர இந்தியாவில் இருந்து தற்போதுவரை இந்திய அரசியலை வரையறுத்து வந்த சாதி, பாலினம், மக்கள் தொகை, நிலவியல் சூழல் ஆகியவற்றின் பிரிவினையை இந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி பெற்ற மாபெரும் வெற்றி சமப்படுத்தியுள்ளது.

  தற்போதைய கணக்கீட்டின்படி, பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் 48%. அதாவது, இரண்டு ஒரு இந்தியர் மோடி பிரதமராக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி 332 தொகுதிகளை வென்றிருந்த நிலையில் இந்த முறை 349 தொகுதிகள் வரை வெற்றி பெறவுள்ளது. பா.ஜ.க மட்டும் தனிப்பட்ட முறையில் 298 தொகுதிகளில் வெற்றி பெறவுள்ளது.

  நாடு முழுவதும் காங்கிரஸ் மிகத் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையிலும் அக்கட்சியால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. தற்போதுள்ள முன்னிலை நிலவரத்தின்படி, காங்கிரஸால் எதிர்கட்சி நிலையைக் கூட எட்ட முடியாது. காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் 51 தொகுதிளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதில், பாதி தொகுதிகள் கேரளா மற்றும் பஞ்சாபிலிருந்து காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது குடும்பத் தொகுதியான அமேதி தொகுதியில் வெற்றி பெறுவதற்கு திணறிவருகிறார்.

  பா.ஜ.கவுக்கு பெரும் நெருக்கடியைத் தரும் என்று கருதப்பட்ட சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கூட்டணி பெரிய அளவில் சாதிக்கவில்லை. பா.ஜ.கவிடமிருந்து 10 தொகுதிகள் வரை மட்டுமே கைப்பற்றியுள்ளன. அந்த தொகுதிகளையும் மேற்கு வங்கம், ஒடிசாவில் பெற்ற வெற்றியின் மூலம் பா.ஜ.க எளிதில் ஈடுகட்டிவிட்டது.

  மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கால் தடத்தைப் பின்பற்றி பா.ஜ.க 19 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்துள்ளார். பா.ஜ.கவுக்கு எதிராக உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட்டில் எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டன. இந்த சாதி ரீதியான கணக்கீடுகள் பா.ஜ.கவுக்கு எப்போதும் பொருத்தமானதாக அமைவதில்லை. கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, இந்த மூன்று மாநிலங்களில் மொத்தமுள்ள 134 தொகுதிகளில் 117 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

  உத்தரப் பிரதேசத்தில் மெகாகூட்டணிக்கு ஆதரவில்லாத சாதி அமைப்புகளை ஒன்று திரட்டும் பணியில் பா.ஜ.க ஈடுபட்டது. ஜாதவ், தலித், இஸ்லாமியர்கள் ஆகிய பிரிவுகளில் 40% வாக்காளர்கள் உள்ளனர். மீதமுள்ள 60 % வாக்காளர்களை சரியான திட்டமிடலின் மூலம் பா.ஜ.க ஒருங்கிணைத்தது. இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வரும் யாதவ் அல்லாதவர்கள், ஜாதவ் அல்லாதவர்கள் பா.ஜ.கவுக்கு வாக்களித்துள்ளார்கள் என்று தெரிகிறது.

  பீகாரில், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலிருந்து அங்கே பா.ஜ.க அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி என்பது தெரியவந்துள்ளது. பீகாரிலுள்ள 15% இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிலுள்ள வளர்ந்த மக்களின் வாக்கு வங்கி, நிதிஷ் குமார் கைவசம் உள்ளது. அதனால் தான், 2014 ஆண்டு பா.ஜ.க வெற்றி பெற்ற 22 தொகுதிகளை விட ஐந்து தொகுதிகள் குறைவாக போட்டியிடுவதற்கு ஒப்புக்கொண்டு ஜனதா தளத்தை கூட்டணியில் வைத்துள்ளது.

  ஜார்கண்ட்டில் அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் அமைப்புக்கு ஒரு தொகுதி ஒதுக்கி மாநிலத்திலுள்ள குர்மி வாக்குகளை தங்கவைத்துள்ளது. இது பா.ஜ.க, இதர பிற்படுத்தபட்ட மக்களையும், உயர் சாதியினரையும் நெருங்க உதவி செய்தது.

  2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தெளிவான, முழுமையான தந்திரங்களை மோடி, அமித்ஷா கூட்டணி பயன்படுத்தியுள்ளனர் என்பதை எதிரொலிக்கச் செய்துள்ளது. வாக்காளர்கள் தேர்வுகளிலிருந்து எதிர்கட்சிகளின் கருத்துகளுக்கு எதிர் கருத்து தெரிவிப்பது வரை இருவர் கூட்டணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

  பா.ஜ.க இந்த முறை சர்ச்சைக்குரியவர்களையும் வெளியில் முகம் தெரியாதவர்களையும் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது. தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா தாகுர், தேஜஸ்வி சூர்யா, கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், நடிகர் ரவி கிஷன் ஆகியோரை களமிறக்கியது. பா.ஜ.க களமிக்கிய 103 புதிய முகங்களில் 80 பேர் எம்.பியாக தேர்வாகவுள்ளனர்.

  குடும்ப அரசியல் முறை அதிகமாக இருக்கும் இந்திய அரசியலில் பா.ஜ.கவின் வாக்காளர்கள் தேர்வு வித்தியாசமானதாக உள்ளது. கர்நாடகாவில் கவுடாக்கள், மஹாராஷ்டிராவில் சரத் பவார் குடும்பம், பீகாரில் லல்லு பிரசாத் குடும்பம், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் குடும்பம், அஜித் குடும்பம், அசாமில் கோகாய், ஹரியாணாவில் சௌதாள்ல் ஆகியோர் தொடர்ந்து வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுவருகின்றனர்.

  இன்று மாலையில், தாமதமாக பிரதமர்மோடி, பா.ஜ.க நிர்வாகிகளுடன் உரையாற்றலாம் என்று எதிர்பாரக்கப்படுகிறது. சீன அதிபர், ஷி ஜிங்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மோடியின் நல்ல நண்பர் இஸ்ரேல் பிரதமர் பென்ஞ்சமின் நேதன்யாஹூதான் முதல் ஆளாக மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர், இந்தியில் ட்விட் செய்து வாழ்த்து தெரிவித்தார்.
  தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

  Also see:

  Published by:Karthick S
  First published: