பா.ஜ.க எம்.பிக்களுக்கு மோடி வழங்கிய முக்கிய அறிவுரை!

பா.ஜ.கவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பாரபட்சத்துடன் பணியாற்றக் கூடாது.

news18
Updated: August 4, 2019, 10:45 PM IST
பா.ஜ.க எம்.பிக்களுக்கு மோடி வழங்கிய முக்கிய அறிவுரை!
மோடி
news18
Updated: August 4, 2019, 10:45 PM IST
தேர்தலில் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் சேர்த்து ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும் என்று பா.ஜ.க எம்.பிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க எம்.பிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் இரண்டு நாள்களாக நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த முகாம் இன்று நிறைவடைந்தது. இந்த முகாமில் 380-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, எம்.பிக்களுக்கு அறிவுரை வழங்கினார். மோடி பேசிய விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் சுருக்கமாக விளக்கினார். அவர் கூறியதாவது, ‘பா.ஜ.கவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பாரபட்சத்துடன் பணியாற்றக் கூடாது.


அதுபோன்ற மோசமான எண்ணங்களை களைந்து எரிந்துவிட்டு அனைவரின் நல்வாழ்வுக்காகவும் நீங்கள் அரசியல் நடத்தவேண்டும். வாக்களிக்காதவர்களின் மனைதையும் வென்றால் அடுத்த தேர்தலில் அவர்களது மனதையும் வென்று விடலாம்’ என்று அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார்.
First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...