Home /News /national /

உலக உணவு, எரிசக்தி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் - I2U2 மாநாட்டில் பிரதமர் மோடி..

உலக உணவு, எரிசக்தி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் - I2U2 மாநாட்டில் பிரதமர் மோடி..

ஐ2யூ2 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஐ2யூ2 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

I2U2 summit: I2U2 உடன், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் உலகளவில் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் யார் லாபிட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் நான்கு நாடுகளின் குழுவான ‘I2U2’ இன் முதல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார்

‘I2U2’ என்பதில் , ‘I’ என்பது இந்தியா மற்றும் இஸ்ரேல் என்றும், ‘U’ என்பது அமெரிக்கா மற்றும் UAE என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற்ற நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தின் போது இந்தக் குழு உருவாக்கும் திட்டம் கருத்தில் கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த மூன்று நாடுகளுடனும் இந்தியா தனியாக இருதரப்பு மூலோபாய உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருகின்றன.

மோடி தனது தொடக்க உரையில், I2U2 தனது முதல் உச்சிமாநாட்டில் “நாம் அனைவரும் சிறந்த நண்பர்களாக திகழ்வதோடு, பொதுவான நோக்கங்கள் மற்றும் பொதுவான நலன்களை கொண்டுள்ளோம். பல்வேறு துறைகளில் கூட்டாக மேற்கொள்ளக்கூடிய திட்டங்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம், மேலும் இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறையையும் உருவாக்கியுள்ளோம்.முதலீடு, நிபுணத்துவம் மற்றும் சந்தைகள் ஆகிய நம் நாடுகளின் பரஸ்பர வலிமையை ஓரணியில் திரட்டுவதன் மூலம்,  நமது செயல்திட்டத்தை விரிவுப்படுத்துவதோடு, சர்வதேச பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவோம். உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் வேளையில், நமது கூட்டுறவு கட்டமைப்பு, செயல்முறை ஒத்துழைப்புக்கு சிறந்த முன்மாதிரியாக திகழும்" என்று கூறினார்.

"I2U2 உடன், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் உலகளவில் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோம் என்று நான் நம்புகிறேன்" என்று பிரதமர் மோடி பேசினார்.

காமராஜர் கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி - பிரதமர் மோடி புகழாரம்

பிரதமர் மோடியின் உரைக்கு முன்னதாக, பைடன், லாபிட் மற்றும் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் தங்கள் தொடக்கக் கருத்துகளை வெளியிட்டனர்.

பைடன் தனது உரையில் இந்தியாவை "உலகின் முக்கிய உணவு உற்பத்தியாளர்" என்று பாராட்டினார். மேலும் இந்தியாவில் I2U2 குழுமம் அறிவித்துள்ள மேம்பாட்டுத் திட்டங்களையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், "இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள், பருவநிலை நெருக்கடியை துரிதப்படுத்துதல் அல்லது உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரிப்பது ஆகியவை அடங்கும்.உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் மிருகத்தனமான மற்றும் தாக்குதலால் சந்தைகள் மோசமடைந்துள்ளன. அதில் இருந்து கூட்டாக மேம்பட உழைக்க வேண்டும்" என்றார்.

உக்ரைனின் தற்போதைய ராணுவ சூழ்நிலையின் பின்னணியில் உணவு, ஆற்றல் மற்றும் பிற துறைகளில் எதிர்மறையான விளைவுகளை கட்டவிழ்த்து விட்டது. ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் உணவுப் பூங்காக்களை உருவாக்க 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் என்று உறுதியளித்துள்ளது.உணவு பூங்காக்களுக்காக இந்தியா தனியாக நிலம் ஒதுக்கீடு செய்யவும் வாக்களித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தனியார் துறைகள் தங்கள் நிபுணத்துவத்தை வழங்கவும், திட்டத்தின் ஒட்டுமொத்த நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் புதுமையான தீர்வுகளை வழங்கவும் அழைக்கப்பட்டுள்ளது இதன் மூலம்  பயிர் விளைச்சலை அதிகரிக்க உதவுவதோடு, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் உணவுப் பாதுகாப்பின்மையைச் சமாளிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகளில் வருமானத்தை பெருக்கவும் இத்திட்டம் பயன்படும்.

விவசாயத் திட்டத்தைத் தவிர, I2U2 குழுமம் குஜராத்தில் 300 மெகாவாட் (MW) காற்றாலை மற்றும் சூரிய ஆற்றலைக் கொண்ட "கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை" ஆதரிப்பதாகவும் அறிவித்தது. "2030க்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிபொருள் திறன்" என்ற இந்தியாவின் தேடலில் இந்த திட்டம் மற்றொரு படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Israel, Modi, Narendra Modi, UK, USA

அடுத்த செய்தி