காங்கிரஸ் அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டது- மோடி குற்றச்சாட்டு

news18
Updated: July 11, 2018, 8:02 PM IST
காங்கிரஸ் அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டது- மோடி குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடி
news18
Updated: July 11, 2018, 8:02 PM IST
விவசாயிகளுக்கு பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு ஏமாற்றி விட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, மத்திய அரசு அண்மையில் உயர்த்தியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாஜக மற்றும் சிரோன்மனி அகாலிதளம் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரத்துக்குப் பின் ஆட்சியில் இருந்தவர்கள் விவசாயிகளைப் புறக்கணித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியை சாடினார். விவசாயிகள்தான் இந்தியாவின் ஆன்மா என தெரிவித்த பிரதமர் மோடி, விவசாயிகளின் பலத்தை காங்கிரஸ் அரசு தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.

விவசாயிகளுக்கு பல வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ் அதை நிறைவேற்றவில்லை என தெரிவித்த பிரதமர், பாஜக பதவியேற்ற 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். மத்திய அரசின் நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியினர் தூக்கமின்றி தவிப்பதாகவும் மோடி தெரிவித்தார்
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...