முதல்வர், பிரதமராக 20 ஆண்டுகள் தொடரும் மோடியின் வெற்றிப் பயணம்

ஜனநாயகப் பூர்வ வழிமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர், பிரதமராக தொடர்ந்து 20 ஆண்டுகளை மோடி கடந்துள்ளார்.

முதல்வர், பிரதமராக 20 ஆண்டுகள் தொடரும் மோடியின் வெற்றிப் பயணம்
ஜனநாயகப் பூர்வ வழிமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர், பிரதமராக தொடர்ந்து 20 ஆண்டுகளை மோடி கடந்துள்ளார்.
  • Share this:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் மோடி 2001-ம் ஆண்டு குஜராத்தின் முதல்வரானார். அப்போது குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கப் பாதிப்புகளை சிறப்பாக கையாண்டார். அப்போதிலிருந்து, இப்போதுவரை அவருடைய பயணம் ஏறுமுகமாகவே இருந்துவருகிறது. குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருந்தகாலத்தில், அவரைப் பற்றிய வதந்திகள், சர்ச்சைகள் ஏராளமாக இருந்துவந்தன. இருப்பினும், அவருடைய வளர்ச்சிப் பணிகள் அவருக்காக பேசின. பெண் குழந்தைகளுக்கான கல்வி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், உலகத் தரம் வாய்ந்த நகர்ப்புற கட்டமைப்பு, குஜராத்தில் உற்பத்தி போன்றவை அவர் குஜராத்தில் முதல்வராக இருந்தகாலத்தில் அவருடைய பெயரை நாடு முழுவதும் பரப்பியது.

அவருடைய ஆட்சிக் காலத்தில் குஜராத், புதிய இந்தியாவின் நம்பிக்கைக்குரிய மாநிலமாக உருப்பெற்றது. அதன்காரணமாக, 2013-ம் ஆண்டில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடியை பிரதமராக முன்னிறுத்தி பா.ஜ.க மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் மிகப்பெரும் வெற்றியைக் கொடுத்தது. பா.ஜ.க முதன்முதலாக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சமூக நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார்.

குறிப்பாக, ஜன்தன், முத்ரா யோஜனா, ஜன் சுரக்ஷா யோஜனா, உஜ்வாலா யோஜானா, உஜாலா யோஜானா, பீம் யுபிஐ, பிரதமர் ஆவாஸ் யோஜனா, சௌபாக்யா யோஜனா, ஆயுஸ்மான் பாரத், பி.எம் கிஷான் உள்ளிட்டத் திட்டங்கள் சமூகத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தின. மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 2019-ம் ஆண்டும் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது.


அதில், முந்தைய தேர்தலை விட மிகப்பெரிய வெற்றி பா.ஜ.க பெற்றது. பிரதமர், இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். தற்போது, அவரது இரண்டாவது ஆட்சிக் காலம் தொடர்ந்துவருகிறது.
First published: October 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading