ஹோம் /நியூஸ் /இந்தியா /

சடலத்துடன் சவாரி செய்த கொலைகாரன்: போலீசிடம் சிக்கவைத்த டாக்ஸி ஓட்டுனர்

சடலத்துடன் சவாரி செய்த கொலைகாரன்: போலீசிடம் சிக்கவைத்த டாக்ஸி ஓட்டுனர்

கொல்லப்பட்ட மாடல் அழகி

கொல்லப்பட்ட மாடல் அழகி

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  பெண் மாடலை கொன்று சூட்கேஸில் வைத்து புதரில் வீசியவனை, டாக்ஸி ஓட்டுனர் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

  மான்ஸி தீக்ஸித் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மும்பை வந்து இங்கு மாடலிங் பணி செய்து வந்துள்ளார். இவர் மாடலாகவும், ஈவென்ட் மேனேஜ்மெண்ட் வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

  மாடல் அழகி மான்சி தீக்ஷித்

  இந்நிலையில் மான்ஸிக்கு முசாமில் சயீத் என்பவர் தொலைபேசியில் அழைத்து அவரை சந்திக்கும்படி கூறியதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து மான்ஸி அவரை சந்தித்துள்ளார்.

  மாடல் அழகி மான்சி

  அப்போது, இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளாது. அப்போது தன் கையில் வைத்திருந்த சுத்தியலால் மாடல் மான்ஸி தீக்ஸித்தை சயீத் தாக்கியுள்ளார். இறந்து விட்டாரா என்பதை உறுதி செய்த சயீத், இறந்த பெண்ணின் உடலை சூட்கேஸில் திணித்து ஆன் லைன் மூலமாக மும்பை ஏர்போர்ட் செல்ல டாக்ஸியும் புக் செய்துள்ளார்.

  மாடல் அழகி மான்சி

  டாக்ஸியில் ஏறிய சயீத், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத மலாட் வெஸ்ட் பகுதி வழியாக காரை ஓட்டச் சொல்லியுள்ளார். அப்பகுதி வந்ததும் சூட்கேஸுடன் கீழே இறங்கிய சயீத், டாக்ஸிக்கு பணம் கொடுத்து போகச் சொல்லி விட்டு கையிலிருந்த சூட்கேஸை புதரில் வீசி விட்டு அங்கிருந்து ரிக்‌ஷா ஏறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

  சடலம் தூக்கி எறியப்பட்ட பகுதியில் போலீஸ் ஆய்வு

  ஏர் போர்ட்டுக்கு காரை புக் செய்து விட்டு நடுவழியில் இறங்கவும் டாக்ஸி ஓட்டுநருக்கு சந்தேகம் வந்துள்ளது. தூரத்தில் காரை நிறுத்தி விட்டு சூட்கேஸை வீசியதை பார்த்த ஓட்டுநர் காவல்துறையிடம் புகார் செய்துள்ளார். விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர்  ஆன்லைனில் டாக்ஸி புக் செய்த போது அவர் கொடுத்த விவரங்களை வைத்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். மேலும் குற்றவாளி கார் ஏறும் போது கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.

  தடயங்களை சேகரிக்கும் போலீசார்

  ஆனால் மாடல் மான்ஸி தீக்ஸித்க்கும் குற்றவாளிக்கும் என்ன தொடர்பு, ஏன் சந்திக்க வந்தார் போன்ற எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை. இறந்தவரின் நண்பர்களிடம் விசாரித்த போது குற்றாவாளியின் பெயரைக் கூட இதுவரை மான்ஸி தங்களிடம் கூறியதில்லை என்று தெரிவித்துள்ளனர். சயீத் மீது பிரிவு எண் 302 மற்றும் 201 கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

  Published by:Manoj
  First published:

  Tags: Andheri, Body stuffed in suitcase, Model killed