மதுபோதையில் இளம்பெண் ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப்பிரதேசம் குவாலியர் சாலையில் சென்றுக்கொண்டிருந்த ராணுவ வாகனத்தை இளம்பெண் ஒருவர் மறித்துள்ளார். பிஸியான சாலையில் வாகனங்கள் கடந்துக்கொண்டிருக்க ராணுவ வாகனத்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணை அந்தப்பகுதியில் சென்றவர்கள் தங்களது செல்போன் கேமராக்களில் படம் படித்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் ராணுவ வாகனத்தை மறித்த இளம்பெண் பேணட்டின் மீது சாய்ந்தவாறு செல்போன் பேசிக்கொண்டிருந்தார். வானத்தில் இருந்த ராணுவ வீரர்கள் ஹாரன் அடித்து அந்தப்பெண்ணை விலகிச் செல்லுமாறு கூறினார். உடனே அந்தப்பெண் ராணுவ வீரர்களுடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். காரை மெல்ல இயக்கத் தொடங்கியதும் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது காலால் வாகனத்தின் ஹெட்லைட்டை தாக்கினார். அப்போது அவரது ஹேண்ட்பேக்கில் இருந்த மதுபாட்டில் சாலையில் விழுந்து உடைந்தது.
இதனையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிவந்த ராணுவ வீரர் அந்தப்பெண்ணை நகர்ந்து செல்லுமாறு கூறினார். ராணுவ வீரரை தள்ளிவிட்டு அவருடன் வாக்குவாதம் செய்தார். அந்தப்பெண் சாலையில் இருந்து நகர்ந்ததும். ராணுவ வீரர் வாகனத்தை எடுத்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து பெண் போலீஸார் வந்து அந்தப்பெண்ணை அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
A 22-year-old model from Delhi created ruckus in an inebriated state in Gwalior she blocked an army vehicle started vandalising the vehicle, she pushed the jawan started arguing later a woman cop took her to the police station @ndtv@ndtvindia@GargiRawat@manishndtvpic.twitter.com/tdiqZF32EB
விசாரணையில், அந்தப்பெண் டெல்லியை சேர்ந்த மாடல் அழகி என்பது தெரியவந்துள்ளது. தனது இரண்டு நண்பர்களுடன் குவாலியரை சுற்றிப்பார்க்க வந்துள்ளார். மதுபோதையில் அந்தப்பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.ராணுவ வீரர்கள் அந்தப்பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்காததால் அந்தப்பெண் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதாக குவாலியர் போலீஸார் தெரிவித்தனர்.