ஏலச் சீட்டு விவகாரத்தில் பிரச்சனை - செல்போன் கடை உரிமையாளரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தம்பதி

மாதிரிப் படம்

தெலங்கானாவில் செல்போன் கடை உரிமையாளரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  தெலங்கானாவில் ஏலச்சீட்டு நடத்தியதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக செல்போன் கடை உரிமையாளரை, பெட்ரோல் ஊற்றி ஒரு தம்பதி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டாவைச் சேர்ந்த ராஜூ என்பவர் காங்கிரஸ் பவன் எதிரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இந்நிலையில் அசோக்கிடம், ராஜூ ஏலச்சீட்டிற்கு பணம் கட்டி வந்துள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே பல மாதங்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

  ராஜூவின் கடைக்கு நேற்று வந்த அசோக்கும் அவரின் மனைவியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அசோக் பாட்டிலில் எடுத்து வந்திருந்த பெட்ரோலை ராஜூ மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுக்க தீப்பற்றிய நிலையில் ராஜூ சாலையில் ஓடினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உடனே அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைத்து சிகிச்சைக்காக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஹனுமகொண்டா போலீசார் தலைமறைவாக இருக்கும் அசோக் மற்றும் அவரின் மனைவியை தேடி வருகின்றனர்.
  Published by:Karthick S
  First published: