முகப்பு /செய்தி /இந்தியா / மணிப்பூரில் பதற்றமான சூழல்.. 5 நாள்களுக்கு இணைய சேவை முடக்கி உத்தரவு

மணிப்பூரில் பதற்றமான சூழல்.. 5 நாள்களுக்கு இணைய சேவை முடக்கி உத்தரவு

மணிப்பூரில் ஐந்து நாள்கள் மொபைல் இணைய சேவை தடை

மணிப்பூரில் ஐந்து நாள்கள் மொபைல் இணைய சேவை தடை

சமூக வலைத்தளம் மூலம் வன்முறை பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Manipur, India

மணிப்பூர் மாநிலத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மொபைல் இணைய சேவைக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அம்மாநிலத்தின் உள்துறை சிறப்பு செயலாளர் கியான் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.

சமூக வலைத்தளம் மூலம் சில சமூக விரோத சக்திகள் வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி அதன் மூலம் வன்முறை ஏற்படுத்த பார்க்கிறார்கள். எனவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் உத்தரவில் கூறியுள்ளார்.

அம்மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பூகாக்சாவ் இகாங்க் என்ற பகுதியில் சில மர்ம நபர்கள் நான்கு பேர் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வாகனங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு சமூக மோதல் உருவாகி பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த மோதல் வன்முறை அல்லது கலவரத்தில் முடியலாம் என்ற அச்சத்தில் அதை தடுக்கும் விதமாக அரசு இணைய சேவைக்கு ஐந்து நாள் தடை விதித்துள்ளது

இதனிடையே, மணிபூரைச் சேர்ந்த அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் என்ற அமைப்பு, அம்மாநிலத்தில் உள்ள மலை பகுதிகளுக்கு பிரத்தியேக சட்ட உரிமைகள் வழங்க வேண்டும் என நீண்ட நாள்களாக வலியுறுத்திவருகின்றன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பாஜக அரசு வாக்குறுதி வழங்கிய நிலையில், அதை தற்போது நிறைவேற்ற மறுப்பதாக மாணவர் அமைப்பு புகார் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பு அங்கு சாலை போக்குவரத்து முடக்க போராட்டம் நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: வேலை செய்யுங்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுங்கள்..பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

இதன் காரணமாக அசாமில் இருந்து மணிப்பூருக்கு பொருள்களை கொண்டு வரும் சரக்கு லாரிகள் எல்லைப் பகுதியில் நுழைய முடியாமல் முடங்கியுள்ளது. இந்த போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மணிப்பூர் அரசு பிஷ்னூர் மற்றும் சவுராசந்த்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் அடுத்த இரு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

First published:

Tags: Internet, Manipur, Mobile networks