முகப்பு /செய்தி /இந்தியா / 145 நாட்களுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் இணைய சேவை..!

145 நாட்களுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் இணைய சேவை..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தொழில்நுட்ப வசதியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என உள்ளூர் மதத் தலைவர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் 145 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் இன்னும் இணைய சேவை வழங்கப்படவில்லை. கார்கில், லடாக் பகுதிகளில் எல்லாம் இச்சேவை மீண்டும் அளிக்கப்பட்டுள்ளன. யூனியன் பிரதேசங்களைப் பிரித்து, சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் ஏற்பட்ட போராட்டங்களின் போது ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டன.

சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் இயல்பு நிலை திரும்பியதால் இணைய சேவை அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என உள்ளூர் மதத் தலைவர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ப்ராட்பேண்ட் சேவை முன்னதாகவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.

எவ்வித பதற்ற சூழலும் ஏற்படக்கூடாது என முன்னெச்சரிகையாக பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நான்கு மாதங்களுக்கு முன்னர் இணைய முடக்கம், முக்கிய அரசியல்வாதிகள் கைது, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை எனப் பல தடைகளுக்குப் பின்னர் முதல் படியாக இணைய சேவை தற்போது மீட்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ’இந்தியா 2050’- காலநிலை மாற்றத்தின் அபாயத்தைக் காட்டும் டிஸ்கவரி ஆவணப்படம்!

First published:

Tags: Article 370, Jammu and Kashmir