ஹோம் /நியூஸ் /இந்தியா /

திடீரென வெடித்து சிதறிய செல்போன் பேட்டரி... வைரலாகும் வீடியோ

திடீரென வெடித்து சிதறிய செல்போன் பேட்டரி... வைரலாகும் வீடியோ

செல்போன் பேட்டரி வெடிப்பு

செல்போன் பேட்டரி வெடிப்பு

நல்ல வேளையாக அருகே இருந்து வாடிக்கையாளரும் கடைக்காரரும் பின்னால் நகர்ந்து காயங்கள் இன்றி தப்பியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India

செல்போன் கடை ஒன்றில் திடீரென வாடிக்கையாளரின் செல்போன் பேட்டரி வெடித்த பரபரப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தும் போது அவை வெடிக்கும் நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், செல்போன் கடையில் அதை ரிப்பேர் செய்யும் போது திடீரென வெடித்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ராட்லம் என்ற பகுதியில் உள்ள ஜாவ்ரா என்ற பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் வந்துள்ளார். தனது செல்போன் பேட்டரி கோளாறாக உள்ளது என அவர் கூறிய நிலையில், செல்போன் கடைக்காரர் பேட்டரி பழுதடைந்து விட்டது வேறு பேட்டரி மாற்ற வேண்டும் என்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த மற்றொரு நபர் பேட்டரி தேறுமா என்று ஒரு முறை பார்ப்போம் என கடைக்காரரிடம் கேட்க அந்த பேட்டரியை எடுத்து செக் செய்துள்ளார். அப்போது திடீரென்று தீப்பிடித்து நெருப்புடன் அந்த செல்போன் பேட்டரி வெடித்துள்ளது. நல்ல வேளையாக அருகே இருந்து வாடிக்கையாளரும் கடைக்காரரும் பின்னால் நகர்ந்து காயங்கள் இன்றி தப்பியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் அப்படியே சிசிடிவியில் பதிவாகி வைரலாகி வருகிறது.சிறிது நேரம் கடையில் புகை மண்டியிருந்த நிலையில், கடைக்காரர் பதைபதைப்புடன் சேதத்தை சரி செய்துள்ளார்.

First published:

Tags: Blast, CCTV Footage, Mobile phone, Viral Video