Home /News /national /

மதுபோதையில் மருத்துவமனை மீது சுற்றுலா குழுவினர் தாக்குதல்.. கல்வீச்சில் இறங்கிய பெண்கள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

மதுபோதையில் மருத்துவமனை மீது சுற்றுலா குழுவினர் தாக்குதல்.. கல்வீச்சில் இறங்கிய பெண்கள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

மருத்துவமனையில் தாக்குதல்

மருத்துவமனையில் தாக்குதல்

Kerala Border |  மருத்துவமனை ஊழியர்களை குடி போதையில் கும்பலாக மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும்  சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரமலான்  பண்டிகை விடுமுறை என்பதால் கேரளா மாநிலம்  கொல்லம் சவரா பகுதியில் இருந்து பழனி, கன்னியாகுமரி, மண்டைக்காடு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்று திரும்பும் வழியில் வாகனங்களில் வந்த நபர்கள் குமரி எல்லை அருகே கேரளா மாநிலம் பாறசாலை சரஸ்வதி பல்நோக்கு  மருத்துவமனை அருகே டீ கடை ஒன்றில்  டீ குடிக்க  இறங்கினர். தொடர்ந்து அருகில் உள்ள சரஸ்வதி மருத்துவமனையில் அனுமதி இன்றி புகுந்து கழிவறைக்குள் கூட்டம் கூட்டமாக சென்று கழிவறையை பயன்படுத்தி விட்டு காவலாளியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதற்கு பதிலளித்த காவலாளி மீது  சுற்றுலா சென்று திரும்பிய அந்த கும்பல் பெண்கள் உட்பட மருத்துவமனைக்குள் புகுந்து காவலாளிகள், ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். பெண்கள் கல்லை எடுத்து மருத்துவமனை மீது வீசினர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பாறசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்ட  கும்பலை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

Also Read: நகை பறிப்பில் ஈடுபட்டு சிக்கிய காதலர்கள்.. ஆன்லைன் சூதாட்டத்தால் எதிர்காலத்தை தொலைத்த கல்லூரி மாணவர்கள்.. கோவையில் அதிர்ச்சி..

மேலும் மருத்துவமனையில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த கும்பல் அத்துமீறி சென்று தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அந்த கும்பலில் ஆண்கள் பலரும் மது போதையில் இருந்ததாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவித்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்த போலீசார் உயர் மட்ட அரசியல் வட்டாரங்களில் இருந்து இவர்களை விடுதலை செய்ய சிபாரிசுகள் வந்ததை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட கொல்லம் மாவட்டம் சவர பகுதியை சேர்ந்த அரவிந்த், சந்தீப், ராமச்சந்திரன், கிரிஷன், மனோஜ், சுரேஷ் குமார் ஆகிய ஆறுபேர்கள்  மீது வழக்குப்பதிவு செய்த பின்  ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பரபரப்பான பிரபல பல்நோக்கு மருத்துவமனைக்குள் குடி போதையில் ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் நோயாளிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது அதன்  CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:

Tags: Attack, Crime News, Hospital, Kanyakumari, Kerala, Tamil News

அடுத்த செய்தி