ஹோம் /நியூஸ் /இந்தியா /

மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து பூஜை செய்த சம்பவம் - 4 பேர் கைது

மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து பூஜை செய்த சம்பவம் - 4 பேர் கைது

மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து பூஜை செய்த சம்பவம்

மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து பூஜை செய்த சம்பவம்

கர்நாடகாவில் மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  கர்நாடகாவில் தசரா பண்டிகையையொட்டி நடைபெற்ற பேரணியின் போது, மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

  பிடார் மாவட்டத்தில் பழைய கோட்டை நகரப் பகுதியில் நூற்றாண்டுகள் பழமையான மஹ்முத் கவான் மசூதி, மதராசா உடன் சேர்ந்து அமைந்துள்ளது. இந்நிலையில், அவ்வழியாகக் கடந்த 5ம் தேதி தசரா விழாவையொட்டி, டிராக்டரில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.

  அதில் பங்கேற்றவர்கள் திடீரென மசூதியின் வாயிற்கதவை உடைத்து உள்ளே சென்று மசூதியின் கதவையும் உடைக்க முயன்றனர். முடியாததால், மசூதியின் வாசலிலேயே அவர்கள் பூஜை செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

  இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், ஐதராபாத் எம்.பி. அசாதுதின் ஓவைசி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

  Also Read : பள்ளி கழிவறையில் வைத்து 11 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சீனியர்கள்.. மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

  இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவிய நிலையில் காவல்துறையினர் இதில் தொடர்புடைய 9 பேர் மீது வழக்குப்பதிவு தேடிவந்தனர். அதனடிப்படையில், மசூதிக்குள் அத்துமீறி நுழைந்தவர்களில் 4 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Dusshera celebrations, Karnataka, Mosque