MLM மோசடி மூலம் ₹ 500 கோடி சுருட்டிய ஜான் பிரபாகர் மனைவியால் படுகொலை

எம்எல்எம் மூலம் தமிழ்நாட்டில் 500 கோடி ரூபாய் மோசடி செய்த ஜான் பிரபாகரன் ஐதராபாதில் மனைவியால் படுகொலை செய்யப்பட்டார்.

MLM மோசடி மூலம் ₹ 500 கோடி சுருட்டிய ஜான் பிரபாகர் மனைவியால் படுகொலை
ஜான் பிரபாகர் மற்றும் அவரது மனைவி
  • Share this:
சென்னையை சேர்ந்தவர்கள் ஜான் பிரபாகரன் - சுகன்யா தம்பதி.  இவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எம்எல்எம் மூலம் பொதுமக்களிடையே 500 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டனர்.

இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலமாதங்களில் ஜாமினில் வெளிவந்த ஜான் பிரபாகரன் தலைமறைவாகிவிட்டார்.

ஜான் பிரபாகரன் மனைவி சுகன்யா 2018-ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானார். பின்னர் திருப்பதி அருகில் உள்ள சந்திரகிரி சென்று தன்னுடைய தாய் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.


தலைமறைவான கணவர் குறித்து தேடி வந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள மவுலாலியில் இருப்பது தெரிய வந்தது. கடந்த 15 ஆம் தேதி அங்கு சென்ற சுகன்யா ஜான் பிரபாகரனுடன் தங்கினார்.

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஜான் பிரபாகரன் மரணமடைந்தார். திடீரென்று கணவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக சுகன்யா அருகில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார்.


படிக்க: தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் - அதிகம்... குறைவு... எங்கெங்கே..?

படிக்க: சாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்தது என்ன? - News 18க்கு கிடைத்த பிரத்யேக காட்சிகள்








தகவலறிந்து சென்ற ஐதராபாத் போலீசார், ஜான் பிரபாகரன் உடலைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். இயற்கைக்கு மாறான மரணம் போல் இருந்ததால் பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பி வழக்கு பதிவு செய்து சுகன்யாவிடம் விசாரித்தனர்.

விசாரணையில், ஜான் பிரபாகரன் சுகன்யாவையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு, ஐதராபாத்தில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் ஜான் பிரபாகரனிடம் சுகன்யா சண்டை போட்டுள்ளார். தன்னோடு திருப்பதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த ஜான் பிரபாகரன், தன்னைவிட்டு செல்லுமாறு சுகன்யாவிடம் கூறியுள்ளார். அனைத்து மோசடிக்கும் துணையாக இருந்த தன்னை, 6 ஆண்டுகள் சிறைக்குள்ளேயே தவிக்கவிட்டது ஏன் என கேட்டு சண்டை போட்டுள்ளார்.

மேலும் தான் சிறைக்குள்ளும், சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் கஷ்டப்பட்டதாகவும், ஜான் மட்டும் சந்தோஷமாக வாழ்ந்ததை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக்கூறியுள்ளார்.

இதை அடுத்து கணவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்ததாகவும், தூங்கியபோது ஜான் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததாக சுகன்யா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதை அடுத்து சுகன்யாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading