ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட முன்னுரிமை - பா.ஜ.க தலைவர் அறிவிப்பு

ராஜினாமா செய்த 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் மறைந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் சேர்த்து மொத்தம் 24 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட முன்னுரிமை - பா.ஜ.க தலைவர் அறிவிப்பு
ஷர்மா
  • Share this:
மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அம்மாநில பா.ஜ.க தலைவர் வி.டி.ஷர்மா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்தது. இந்தநிலையில், கமல்நாத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். முன்னதாக, அவரது ஆதரவாளர்கள் 22 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தார். அவர்களும் பா.ஜ.கவில் இணைந்தனர்.

பின்னர், கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தநிலையில், சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ.க ஆட்சியமைத்தது. இந்தநிலையில், ராஜினாமா செய்த 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் மறைந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் சேர்த்து மொத்தம் 24 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.


இதுகுறித்து பேசிய மத்தியப் பிரதேச தலைவர் வி.டி.ஷர்மா, ‘மத்தியப் பிரதேசத்தை ஊழல் மற்றும் மோசமான ஆட்சியிலிருந்து காப்பாற்றுவதற்காக எம்.எல்.ஏ பதவி, அமைச்சர் பதவிகளை விட்டுக்கொடுத்துள்ளனர். மாநிலத்தின் நலனுக்காக தங்களது பதவிகளைத் தியாகம் செய்துள்ளனர். அதனால், பா.ஜ.க வேட்பாளர்கள் பரிந்துரையில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வேட்பாளர் தேர்வு தொடர்பாக இப்போதே ஆன்லைனில் ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும்ஆன்லைன் வாயிலாக இடைத்தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.



சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading