• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஊரடங்கு நிலையில் இது தேவைதானா...? சர்ச்சையில் சிக்கிய நடிகை & எம்.எல்.ஏ ரோஜா

ஊரடங்கு நிலையில் இது தேவைதானா...? சர்ச்சையில் சிக்கிய நடிகை & எம்.எல்.ஏ ரோஜா

வீடியோ காட்சிகள். (கோப்புப் படம்)

வீடியோ காட்சிகள். (கோப்புப் படம்)

"வ்ழிநெடுகிலும் ஊர் மக்கள் நின்று ரோஜா நடந்து வரும் பாதையில் பூக்களை தூவினர்”

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆந்திர மாநில எம்.எல்.ஏ நடிகை ரோஜா, தனது தொகுதிக்குச் செல்லும் போது, அங்கு அவருக்கு மக்கள் வரிசையாக நின்று பூக்கள் தூவி வரவேற்பு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜா, தனது தொகுதியான நகரிக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டார்.

    தொகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் அமைக்கப்பட்ட போர்வெல் மோட்டரை அவர் திறந்து வைக்கச் சென்றார். அப்போது, கிராம மக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சாலையின் இருபக்கமும் நின்று, அவர் வரும் பாதையில் பூக்களைத் தூவினர். ரோஜாவும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் நடந்து வந்தார்.



    பின்னர், அவருக்கு பிரமாண்ட மாலை ஒன்று அணிவிக்கப்பட்டது. ஊரடங்கின் போது சமூக இடைவெளி குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், ரோஜா கலந்துகொண்ட நிகழ்ச்சி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: