ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்த எம்.எல்.ஏ. ரோஜா... டாக்டர் கனவை நிறைவேற்றுவதாக உறுதி!

ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்த எம்.எல்.ஏ. ரோஜா... டாக்டர் கனவை நிறைவேற்றுவதாக உறுதி!

எம்.எல்.ஏ. ரோஜா

ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சிக்கப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஆதரவற்றசிறுமி ஒருவரை எம்.எல்.ஏ ரோஜா தத்தெடுத்துதுள்ளார். அவரின் டாக்டர் கனவை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் பச்சிக்கப்பள்ளம். இந்த கிராமத்தில் புஷ்பகுமாரி என்ற சிறுமி குழந்தைகள் நலக் குழுவின் மூலம் ஆதரவற்ற நிலையில் வசித்து வருகின்றார்.

  மருத்துவர் ஆக வேண்டும் எனும் லட்சியத்தோடு உள்ள புஷ்பகுமாரிக்கு நீட் தேர்வில் தகுதி பெற்றும் கையில் பணம் இல்லாத காரணத்தால் கல்லூரியில் சேர முடியாத நிலை உள்ளது. சிறுமியை மருத்துவம் படிக்க வைக்க குழந்தைகள் நலக் குழு ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜாவின் அறக்கட்டளையை அணுகியுள்ளது.

  இந்நிலையில் நடிகை ரோஜா, சிறுமிக்கு உதவ முன்வந்துள்ளார். சிறுமி புஷ்பகுமாரியின் டாக்டர் கனவை, தான் நிறைவேற்றுவதாக நேற்றைய தினம் புஷ்பகுமாரியை நேரில் சந்தித்து உறுதியளித்துள்ளார். சிறுமியும் தன் கனவை நிறைவேற்றுவதாக உறுதியளித்த எம்.எல்.ஏ ரோஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: